ஒருங்கிணைப்பு என்றால் என்ன?

ஒருங்கிணைப்பு என்பது நீங்கள் சுவிட்சர்லாந்தில் நன்றாக உணரும்போது, ​​அனைவரும் ஒரே சமூகத்தின் அங்கமாக உணரும்போது, ​​ஒவ்வொரு நபரும் அனைவரின் நன்மைக்காக பங்களிக்கும்போது ஏற்படுவதாகும். சிறிது சிறிதாக, ஒவ்வொரு நபரும் தங்கள் சாத்தியக் கூறுகளுக்கு ஏற்ப, பொருளாதார, அரசியல், கலாச்சார மற்றும் சமூக வாழ்க்கையில் பங்கேற்க வேண்டும். ஒரு நல்ல ஒருங்கிணைப்புக்கு, மரியாதை, பரஸ்பர உதவி மற்றும் வாய்ப்புகளில் சமத்துவம் ஆகியவை முக்கியம்.

ஒருங்கிணைப்பு எப்படி நடக்கிறது?

அன்றாட வாழ்வில், வீட்டில், வேலையில் மற்றும் ஓய்வு நேரத்தில் ஒருங்கிணைப்பு நிகழ்கிறது. ஒவ்வொரு நபரும் சுதந்திரமாக நடமாடவும் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் முடியும். அனைத்து நாடுகளையும், கலாச்சாரங்களையும் சேர்ந்த மக்களை ஓரே மாதிரியாக மரியாதையாக நடத்த வேண்டும்.

வெளிநாட்டினரை சரியான முறையில் ஒருங்கிணைப்பதற்கான விதிகள் வெளிநாட்டினர் மற்றும் ஒருங்கிணைப்பு பற்றிய ஒன்றிய சட்டத்தின் (LEI) 4வது சரத்தில் கொடுக்கப் பட்டுள்ளன.

ஒருங்கிணைப்பு: சமூகத்தின் அனைவருக்குமான பொறுப்பு

ஒருங்கிணைப்பு அனைவரையும் சம்மந்தப் பட்டது. ஒருங்கிணைப்பு அனைவருக்குமான நன்மைக்கானது.

அரசும்(ஒன்றியம், காந்தோன்கள் மற்றும் கொம்யூன்கள்)சமூகமும் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்க வேண்டும். வெளிநாட்டினர் பொது வாழ்வில் பங்கேற்பதை ஊக்குவிக்க வேண்டும்.

ஒருங்கிணைப்பு முதலில் சாதாரண நிறுவனங்களில் நிகழ்கிறது:

சில நேரங்களில், வெளிநாட்டு மக்கள் இந்த நிறுவனங்களில் சேர உதவியாக ஒருங்கிணைப்பு சலுகைகள் வழங்கப் பட வேண்டும். எடுத்துக்காட்டாக, பிரெஞ்சு மற்றும் பிற பாடங்களுடனான ஒரு ஒருங்கிணைப்பு வகுப்பு, காலப் போக்கில் ஒரு தொழிற்கல்வி பள்ளியில் சேர உதவும்.

ஒருங்கிணைப்பு கொள்கை

2014 முதல், ஒன்றிய அரசு மற்றும் காந்தோன்கள் காந்தோனிய ஒருங்கிணைப்புத் திட்டங்களை (Programmes d’intégration cantonaux – PIC) உருவாக்கியுள்ளன. இந்தத் திட்டங்கள் வெளிநாட்டினருக்கான சலுகைகளை ஒன்றிணைக்கின்றன.

PIC திட்டத்தில், பல்வேறு துறைகள் உள்ளன:

  • தகவல் மற்றும் ஆலோசனை
  • பிரஞ்சு பாடங்கள்
  • பயிற்சி மற்றும் வேலை
  • சிறு குழந்தைப் பருவம்
  • "ஒன்றாக வாழ்வது"
  • பாகுபாடு மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டம்
  • உரைவிளக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு

ஒவ்வொரு காந்தோனும் தன் தேவைகளுக்கு ஏற்ப தன் சொந்த திட்டங்களை உருவாக்குகிறது.

2019 முதல், புகலிடம் தேடி வரும் மக்களுக்கான ஒருங்கிணைப்புச் சலுகைகளும் இந்தத் ப்ரோக்ராம்க ளின் ஒரு பகுதியாகும் (சுவிஸ் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிநிரல் (Agenda Intégration Suisse - AIS)).

PIC களுக்கும் கூடுதலாக, ஒன்றிய அரசு மற்ற தேசிய திட்டங்கள் மற்றும் ப்ரோக்ராம்களை ஆதரிக்கிறது.

ஜூரா காந்தோனில்: ஒருங்கிணைப்புக்கான 2 முக்கிய சேவை மையங்கள்

  • வெளிநாட்டினர் ஒருங்கிணைப்பு மற்றும் இனவெறி எதிர்ப்பு போராட்ட அலுவலகம் (Bureau de l’intégration - BI)

ஜூரா காந்தோனில், இந்த அலுவலகம் வெளிநாட்டினர் ஒருங்கிணைப்பு மற்றும் இனவெறி எதிர்ப்பு போராட்டக் கொள்கையை செயல்படுத்துகிறது.

இந்த அலுவலகம் மக்கள், நிர்வாகம், நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கு இடையேயான தொடர்பு புள்ளியாகும்.

சமூக செயல்பாட்டுச் சேவையின் ஒரு பகுதியான இந்த அலுவலகம் ஜூரா காந்தோனின் உள்துறையின் பொறுப்பில் உள்ளது.

  • ஜூரா புலம்பெயர்ந்தோர் வரவேற்பு சங்கம் (Association Jurassienne d’Accueil des Migrants - AJAM)

AJAM புகலிடம் தேவைப்படும் மக்களை வரவேற்கிறது (பர்மிட் B அகதி, F, N மற்றும் S).

ஜூரா காந்தோனில் அவர்களின் புதிய வாழ்க்கையில் AJAM அவர்களுக்கு ஆதரவளிக்கிறது.

இந்த சங்கம் மக்களுக்கு:

  • மருத்துவ சிகிச்சை பெற
  • வேலை தேட
  • வீடு பிடிக்க
  • மற்றும் ஜூரா சமூக வாழ்க்கையில் ஒருங்கிணைக்க உதவுகிறது.

ஜூரா காந்தோன் இந்தப் பணியை AJAM க்கு ஒப்படைத்துள்ளது.

AJAM பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கான அனிமேஷன் மற்றும் பயிற்சி மையம் (CAFF) மற்றும் சமூக சுகாதார மையம் (MdSC) ஆகியவற்றையும் கவனித்துக் கொள்கிறது.