நீங்கள் இனவெறிச் செயலால் பாதிக்கப்பட்டவரா அல்லது சாட்சியா? என்ன செய்வது?

இனப் பாகுபாடு பள்ளி, வேலை, பொழுதுபோக்கு, போன்ற வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் ஏற்படலாம். Bureau de l’intégration des étrangers et de la lutte contre le racisme (வெளிநாட்டினரின் ஒருங்கிணைப்பு மற்றும் இனவெறி எதிர்ப்பு போராட்ட அலுவலகம்) இனவெறிச் செயலால் பாதிக்கப்பட்ட எவருக்கும், அது பாதிக்கப்பட்டவராகவோ அல்லது சாட்சியாகவோ இருந்தாலும், ஆதரவு, தகவல் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது.

நீங்கள் இனவெறிச் செயலால் பாதிக்கப்பட்டவராகவோ அல்லது சாட்சியாகவோ இருந்தால் என்ன செய்வது?

வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் இனப் பாகுபாடு ஏற்படலாம்.

Bureau de l’intégration des étrangers et de la lutte contre le racisme (வெளிநாட்டினரின் ஒருங்கிணைப்பு மற்றும் இனவெறி எதிர்ப்பு போராட்ட அலுவலகம்) இனவெறிச் செயலால் பாதிக்கப்பட்ட எவருக்கும், அது பாதிக்கப்பட்டவராகவோ அல்லது சாட்சியாகவோ இருந்தாலும், ஆதரவு, தகவல் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது.

ஆலோசனைகள் இலவசம் மற்றும் இரகசியமானது.

ஆலோசனைகள் பல்வேறு வடிவங்களில் இருக்கலாம்:

  • நேருக்கு நேர் சந்திப்பு மூலம்
  • தொலைபேசி மூலம்
  • மின்னஞ்சல் மூலம்

நீங்கள் 032 420 51 12 என்ற எண்ணில் தொலைபேசி மூலம் சந்திப்பை பதிவு செய்து கொள்ளலாம்:

திங்கள் மற்றும் வியாழன் 8:30 மணி முதல் 12 மணி வரை மற்றும் 1:30 மணி முதல் 4:30 மணி வரை

வெள்ளி 8:30 மணி முதல் 12 மணி வரை மற்றும் 1:30 மணி முதல் 4:00 மணி வரை

அல்லது secr.bi@jura.ch க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

Bureau de l’intégration des étrangers et de la lutte contre le racisme (வெளிநாட்டினரின் ஒருங்கிணைப்பு மற்றும் இனவெறி எதிர்ப்பு போராட்ட அலுவலகம்)

ஜூரா காந்தோனில் உள்ள அனைத்து பாகுபாடு வழக்குகளையும் பதிவு செய்கிறது.

வழக்குகள் பெயர் எழுதப் படாமல் அநாமதேயமாக வைக்கப் படுகின்றன.

நீங்கள் ஒரு பாகுபாடு காட்டும் சூழ்நிலையை அறிவிக்க விரும்புகிறீர்களா?

எப்படியிருந்தாலும், முடிந்தவரை அதிகமான தகவல்களையும் ஆவணங்களையும் வழங்குங்கள்.

உதாரணமாக: குறிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள் (யார், என்ன, இடம், தேதி), புகைப்படங்கள் எடுங்கள், செய்திகள் மற்றும் வீடியோக்களை வைத்திருங்கள்.

புகார் அளிக்க விரும்புகிறீர்களா? இந்த அனைத்து ஆதாரங்களும் வழக்கின் தொடர்ச்சிக்கு பயனுள்ளதாக இருக்கும்.