மகப்பேறு விடுப்பு (அல்லது மகப்பேறு உதவித்தொகை)
குழந்தை பிறக்கும் போது வேலையில் இருக்கும் பெண்களுக்கு 14 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு. இந்த சமயத்தில், அவர்கள் தங்கள் சம்பளத்தில் குறைந்தது 80% பெறுவார்கள்.
வேலையில்லாத பெண்கள் அல்லது வேலை செய்ய முடியாத பெண்கள் வேலையின்மை அலுவலகம் அல்லது காந்தோனிய இழப்பீட்டு நிதி அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு உரிமை உள்ளதா என்று அவர்கள் கேட்க வேண்டும்.
பிறப்புக்குப் பிறகு, தாய்மார்கள் எட்டு வாரங்களுக்கு வேலை செய்ய அனுமதிக்கப் படுவதில்லை. இது தாய்மார்களைப் பாதுகாப்பதற்கான ஒரு சட்டம்.