கார் அல்லது மோட்டார் ஓட்டுதல்

சுவிட்சர்லாந்தில் சாலைகள் நன்கு போடப் பட்டவை. போக்குவரத்து விதிகள் மிகவும் முக்கியம். அவை பின்பற்றப் படாவிட்டால், அபராதங்கள் அதிகம்.

போக்குவரத்து விதிகள்

சுவிட்சர்லாந்தில், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம்.

விதிகள் பின்பற்றப் படாவிட்டால், அபராதங்கள் மிக அதிகம், மேலும் உரிமம் ரத்து செய்யப் படலாம். சில முக்கியமான விதிகள்:

  • காரில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும்.
  • 12 வயதுக்குட் பட்ட குழந்தைகள் அல்லது 150 செ.மீ.க்குக் குறைவான குழந்தைகள் அவர்களுக்கு பொருத்தமாக மாறிக் கொள்ளும் இருக்கையில் இருக்க வேண்டும். அது கட்டாயமாகும்.
  • மது (சட்ட வரம்பு 0.5‰) அல்லது போதைப்பொருள் அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது சட்டப்படி தண்டனைக்குரியது.
  • வாகனம் ஓட்டும்போது கையில் தொலைபேசியை வைத்திருப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.

கையால் பிடிக்காத சாதனம் கொண்ட தொலைபேசியை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும்.

  • பகலில் கூட ஹெட்லைட் (தாழ் ஒளிர்வில்) எரிய வேண்டும்.
  • அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில், வேக வரம்பு பொதுவாக 50 கிமீ/மணி.

இருப்பினும், சில தெருக்களில் வேக வரம்பு 30 அல்லது 20 கிமீ/மணி யாக இருக்கலாம்.

சாலை அறிவிப்பு பதாகைகளை கவனித்து அதன்படி நடப்பது அவசியம்.

  • அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளுக்கு வெளியே, வேக வரம்பு 80 கிமீ/மணி.
  • நெடுஞ்சாலைகளில், வேக வரம்பு 120 கிமீ/மணி. சில நேரங்களில் நீங்கள் 100 கிமீ/மணி அல்லது அதற்கும் குறைவாக வேகத்தைக் குறைக்க வேண்டும்.

சாலை அறிவிப்பு பதாகைகளை கவனித்து அதன்படி நடப்பது அவசியம்.

  • இடதுபுறத்தில் முந்திச் செல்ல வேண்டும். இருப்பினும், வெள்ளைக் கோடு தொடர்ச்சியாக இருக்கும் போது முந்திச் செல்வது தடை செய்யப் பட்டுள்ளது.
  • சாலையைக் கடக்க (மஞ்சள் கோடுகளால் குறிக்கப் பட்ட) பாதசாரிகள் கடக்கும் இடத்தை பயன் படுத்தும் போது பாதசாரிகளுக்கு எப்போதும் முன்னுரிமை உண்டு.
  • விபத்து ஏற்பட்டு, யாருக்கும் அடிபட்டிருந்தால் அல்லது வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டால், காவல்துறையை அழைக்க வேண்டும்.

நெடுஞ்சாலை சுங்க வரிகள்

சுவிட்சர்லாந்தில், அரசு சாலைகளுக்கு நிதியளிக்கிறது. நெடுஞ்சாலைகளைத் தவிர, சாலைகளில் நீங்கள் இலவசமாக வாகனம் ஓட்டலாம்.

நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்ட, நீங்கள் ஒரு பட்டையை வாங்க வேண்டும். இது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.

சுங்கச் சாவடிகள், பெட்ரோல் நிலையங்கள், தபால் நிலையங்கள், சில கடைகள் அல்லது காந்தோனிய சாலை போக்குவரத்து அலுவலகங்களில் நீங்கள் அதை ஸ்டிக்கராக (பட்டை) வாங்கலாம். இது வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப் பட வேண்டும்.

அதை மின்னணு வடிவில் ஆன்லைனிலும் வாங்கலாம்.

காப்பீடு

சுவிட்சர்லாந்தில், (கார், மோட்டார் சைக்கிள் போன்ற) மோட்டார் வாகனங்களுக்கு மோட்டார் வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீடு இருக்க வேண்டும். அது கட்டாயமாகும்.

மற்றவர்களின் உயிர் அல்லது உடல் சேதம், வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டால் இந்த காப்பீடு இழப்பீடு வழங்கும்.

மோட்டார் வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீடு தனிநபர் மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீட்டில் சேர்க்கப் படவில்லை. இது ஒரு தனி காப்பீட்டுக் கொள்கையாகும்.

தங்கள் சொந்த வாகனத்திற்கு ஏற்படும் சேதத்திற்கு, (பகுதி அல்லது முழு) Casco காப்பீட்டை வாங்கலாம். இந்த காப்பீடு கட்டாயமில்லை.

ஆனால் எச்சரிக்கை: நீங்கள் தவறு செய்திருந்தால், அல்லது நீங்கள் மது அல்லது போதைப்பொருள் உட்கொண்டிருந்தால், காப்பீட்டு நிறுவனம் பணம் செலுத்த மறுக்கலாம்.

பல தனியார் காப்பீட்டாளர்கள் இந்த வகையான காப்பீட்டை வழங்குகிறார்கள்.

வெளிநாட்டிலிருந்து மோட்டார் வாகனத்தை இறக்குமதி செய்தல்

நீங்கள் சுவிட்சர்லாந்தில் வசிக்க விரும்பினால், வேறொரு நாட்டிலிருந்து உங்கள் காரைக் கொண்டு வர விரும்பினால், நீங்கள் சுங்கத் துறைக்குத் அறிவிக்க வேண்டும். உங்கள் வாகனத்தை சுங்கத் துறையிலிருந்து வெளியெடுக்க வேண்டும். இதன் பொருள் வாகனத்தின் ஆவணங்களை சமர்ப்பித்து வரி செலுத்த வேண்டும்.

வாகனம் தொழில்நுட்ப பரிசோதனையிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

பின்வருபவை உங்களிடம் இருப்பது கட்டாயம்:

  • மோட்டார் வாகனங்களுக்கான மூன்றாம் தரப்பு பொறுப்பு காப்பீடு,
  • சுவிஸ் வாகனப் பதிவுச் சான்றிதழ்,
  • மற்றும் சுவிஸ் பதிவு எண் (உரிமத் தகடு).

Office cantonal des véhicules (OVJ) (காந்தோனிய வாகன அலுவலகம்) உங்களுக்கு இந்த விஷயத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகிறது.