சுவிட்சர்லாந்தின் அரசியல் அமைப்பு

சுவிட்சர்லாந்தின் அரசியல் அதிகாரம் மூன்று நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது: கூட்டமைப்பு (முழு சுவிட்சர்லாந்துக்கும்), மாகாணங்கள் (காந்தோன்கள்), நகராட்சிகள் (கொம்யூன்கள்). சுவிஸ் நாட்டினர் பொதுவாக ஆண்டுக்கு நான்கு முறை அரசியல் தீர்மாணங்களை நிர்ணயிக்க வாக்களிப்பார்கள்.

சுவிஸ் கூட்டமைப்பு

சுவிஸ் கூட்டமைப்பு அதன் தற்போதைய வடிவத்தில் 1848 முதல் உள்ளது. பெர்ன் தலைநகரம் ஆகும்.

சுவிட்சர்லாந்து பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மதங்களைக் கொண்ட நாடு.

சர்வதேச அரசியலில் இது ஒரு நடுநிலையான தேசமாகும்.

மாநிலங்களின் கூட்டரசுமுறை

சுவிட்சர்லாந்து மாநிலங்களின் கூட்டமைப்பினால் ஆன நாடு. அதாவது அது பல மாநிலங்களைக் கொண்டுள்ள நாடு : அவை மாகாணங்கள் எனப்படும். மாகாணங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அதிகம் உண்டு.

அவை பல விஷயங்களை தானாகவே முடிவு செய்யலாம். இது கூட்டாட்சி என்று அழைக்கப்படுகிறது.

நாட்டில் 26 மாகாணங்கள் மற்றும் 2,000க்கும் மேற்பட்ட நகராட்சிகள் அவற்றின் சொந்த அமைப்புகளுடன் உள்ளன.

எடுத்துக் காட்டாக, ஜூரா மாகாணம் தனக்கென சொந்த அரசியலமைப்பு, சொந்த அரசாங்கம், சொந்த பாராளுமன்றம் மற்றும் சொந்த நீதிமன்றங்கள் ஆகியவற்றைக் கொண்டது.

கூட்டமைப்பு சட்டங்கள் சுவிட்சர்லாந்து முழுவதற்கும் பொருந்தும். ஆனால் மாகாணங்களுக்கும் அவற்றின் சொந்த சட்டங்கள் உள்ளன. நகராட்சிகளும் சட்டங்களை (விதிமுறைகள்) விதிக்கலாம்.

மாகாணங்கள் மற்றும் நகராட்சிகள் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றை கவனித்துக் கொள்கின்றன.

எடுத்துக்காட்டாக, பள்ளிகள் செயல்படும் முறை மாகாணம் மற்றும் நகராட்சியைப் பொறுத்து மாறுபடலாம்.

மத்திய அரசு, மாகாணங்கள் மற்றும் நகராட்சிகள் தங்கள் சேவைகளுக்கு நிதியைப் பெற வரிகளை விதிக்கின்றன.

உதாரணமாக பள்ளிகள், மருத்துவமனைகள், கலாச்சாரம் போன்றவற்றிக்காக.

அதிகாரங்களின் பிரிவினை

சுவிட்சர்லாந்தில், அதிகாரம் மூன்று கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

  • சட்டத் துறை (சட்டங்களை விதிக்கிறது)
  • நிர்வாகத் துறை (சட்டங்களை செயல்படுத்துகிறது). சட்டங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய இது பாடுபடுகிறது
  • நீதித் துறை (சட்டங்கள் மதிக்கப் படச் செய்கிறது).

முழு சுவிட்சர்லாந்துக்கான அதிகாரங்கள் (கூட்டாட்சி மட்டம்):

  • சட்டத் துறை: கூட்டாட்சி சட்டமன்றம். இது நாடாளுமன்றம் (200 உறுப்பினர்கள்) மற்றும் மாநிலங்களவை (46 உறுப்பினர்கள்) ஆகியவற்றைக் கொண்டது. உறுப்பினர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • நிர்வாகத் துறை: கூட்டரசு மன்றம் (கூட்டாட்சி சட்டமன்றத்தால் ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் 7 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்).
  • நீதித் துறை: பல தேசிய நீதிமன்றங்கள். ஐக்கிய மாகாணங்களின் உச்சநீதிமன்றம் மிக உயர்ந்த அதிகாரம் கொண்டது (நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் கூட்டாட்சி சட்டமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்).

ஜூரா மாகாணத்தில் அதிகாரங்கள் (மாகாண மட்டம்):

  • சட்டத் துறை: மாகாண சட்டமன்றம் (5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 60 உறுப்பினர்கள்)
  • நிர்வாகத் துறை: அரசாங்கம் (5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் 5 உறுப்பினர்கள்)
  • நீதித் துறை: மாகாண நீதிமன்றம் (இரண்டாவது நிலை), முதல் நிலை நீதிமன்றம், அரசு வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் சிறார் நீதிமன்றம் (நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்).

நகராட்சிகளில் அதிகாரங்கள் (நகராட்சி மட்டம்):

  • சட்டத் துறை: நகர சபை (அல்லது பொதுச் சபை)
  • நிர்வாகத் துறை: நகராட்சி (அல்லது முனிசிபாலிடி)

ஜனநாயக உரிமைகள் (வாக்களிப்பு மற்றும் தேர்தல்களில் பங்கேற்பு)

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து சுவிட்சர்லாந்து குடிமக்களும் வாக்களிக்க தகுதியுடையவர்கள்.

அவர்கள் ஓவ்வொரு அரசியல் சார்ந்த விஷயத்திற்கும் வாக்களிக்கிறார்கள், நகராட்சி, மாகாணம் மற்றும் கூட்டாட்சி மட்டங்களில் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள், இப்பதவிகளுக்கு போட்டியிடலாம்.

ஜூரா மாகாணத்தில், சுவிட்சர்லாந்தில் 10 வருடங்களாகவும் ஜூரா மாகாணத்தில் 1 வருடமாகவும் வசிக்கும் வெளிநாட்டவர்கள் மாகாண மற்றும் நகராட்சி மட்டத்தில் வாக்களிக்கலாம்.

அவர்கள் நகராட்சி மட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்படலாம் (மேயர் பதவி தவிர).

முன்முயற்சிகள்

குடிமக்கள் புதிய சட்டங்களை முன்மொழியலாம் (பொதுமக்கள் முன்முயற்சிகள்)

இதைச் செய்ய, அவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கையொப்பங்களை சேகரிக்க வேண்டும் (சுவிட்சர்லாந்திற்கு: 100,000 கையொப்பங்கள் மற்றும் ஜூரா மாகாணத்திற்கு: 2,000). பின்னர் பொதுமக்கள் இம்முன்முயற்சிகளுக்கு வாக்களிக்கலாம்.

அடிப்படை உரிமைகள் (வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்பு உரிமை, சுதந்திரம்)

கூட்டாட்சி அரசியலமைப்பு சுவிட்சர்லாந்தின் மிக முக்கியமான சட்டமாகும்.

அது கூட்டாட்சி அரசாங்கத்தின் செயல்பட்டையும் மாகாணங்களுடனான அதன் உறவையும் விவரிக்கிறது.

இது மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துகிறது மற்றும் ஸ்விட்ஸர்லாந்து அரசியலின் இலக்குகளை தீர்மாணிக்கிறது.

கூட்டாட்சி அரசியலமைப்பில் வாழ்வதற்கான உரிமை,

அவசர கால உதவி, அனைத்து வகையான பாகுபாடு களுக்கு எதிரான பாதுகாப்பது போன்றவை அடிப்படை மனித உரிமைகள் என எழுதப் பட்டுள்ளன. பாகுபாடு என்பது ஒருவரின் தோற்றம், இனம், மதம், ஊனம் அல்லது மனவளர்ச்சிக் குறைபாடு, பாலினம் அல்லது பாலியல் தேர்வு ஆகியவற்றின் காரணமாக நியாயமற்ற முறையில் நடத்தப்படுவது ஆகும்.

சுவிட்சர்லாந்தில், மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், குழுமச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றிக்கு உத்தரவாதம் உண்டு.

வெளிநாட்டினரின் ஒருங்கிணைப்பு மற்றும் இனவெறியை எதிர்த்துப் போராடுதல் ஆகியவற்றிற்கான அலுவலகம் (Bureau de l'intégration des étrangers et de la lutte contre le racisme) ஜூரா மாகாணத்தில் பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதன் சாட்சிகளுக்கான ஆலோசனை வழங்குகிறது.