அவசர எண்கள்

எல்லா நாளும் 24 மணி நேரமும் அவசர எண்கள் வேலை செய்யும். குறுகிய எண்கள் (3 அல்லது 4 இலக்கங்கள் மற்றும் 0800) எப்போதும் இலவசம். மற்ற எண்களுக்கு சாதாரண கட்டணமாகும்.

தீயணைப்புத் துறை: 118

தீயணைப்புத் துறை அவசர மையத்திற்கு.

ஆம்புலன்ஸ் / முதலுதவி / மீட்பு சேவை: 144

மருத்துவ அவசர சிகிச்சை மையத்திற்கு.

நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போது அது உயிருக்கு அச்சுறுத்தலான அவசரநிலை ஆகும்.

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது (மிகமுக்கிய அவசரநிலை) அல்லது மிகவும் கடுமையான விபத்துக்கு மட்டுமே நீங்கள் 144 ஐ அழைக்க வேண்டும்.

உயிருக்கு ஆபத்தான அவசர நிலை இல்லாத, மற்ற எல்லா மருத்துவப் பிரச்சனைகளுக்கும் நீங்கள் முதலில் குடும்ப மருத்துவர் அல்லது பணியில் உள்ள மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் (கீழே காண்க).

பொது அவசர எண்: 112

காவல் துறை அவசர மையத்திற்கு. அவசர வகையைப் பொறுத்து, காவல் துறை நம் அழைப்பை மற்ற சேவைகளுக்கு (தீயணைப்பு, ஆம்புலன்ஸ், போன்றவற்றிற்கு) மாற்றி அனுப்புகிறது.

ஹெலிகாப்டர் மீட்பு - REGA : 1414

மருத்துவ அவசர ஹெலிகாப்டர் நிறுவனத்திற்கு. பெரும்பாலும், ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் அல்லது போலீசார் அவர்களை அழைக்கிறார்கள்.

விஷ பாதிப்பு : 145

ஒருவர் ஆபத்தான மற்றும் நச்சு பொருளை விழுங்கி விட்டால். அல்லது விஷ காளான் சாப்பிட்டால்.

இந்த எண்ணில், ஒரு குழு உங்களுக்கு ஆலோசனை வழங்கி என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும்.

டாக்ஸ்இன்ஃபோ (Toxinfo) இணைய தளத்தில், விஷம் குறித்து அதிக அளவிலான தகவல்கள் உள்ளன.

மிகமுக்கிய அவசரநிலையா? ஒருவரின் உயிருக்கு ஆபத்தா? அப்படியானால் எண் 144 ஐ அழைக்க வேண்டும்.

ஜூரா மருத்துவமனை (மிகமுக்கியமற்ற அவசரநிலை)

உயிருக்கு ஆபத்தானதல்லாத அவசரநிலைகள் என்பவை உடனடி சிகிச்சை தேவைப்படும் உடல்நலப் பிரச்சினைகள், ஆனால் உயிருக்கு ஆபத்தானவை அல்ல.

காந்தோனிய அவசர மருத்துவ மையம் எல்லா நாளும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அது இந்த முகவரியில் உள்ளது :

ஜூரா மருத்துவமனை (Hôpital du Jura)

Faubourg des Capucins 30

2800 தெலெமோந்த் (Delémont)

032 421 24 26

போர்ரெந்த்ரூய் (Porrentruy) இல், பாலிக்ளினிக் மருத்துவமனை பல்வேறு மருத்துவ பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கிறது,

எல்லா நாளும், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, முன் அனுமதியுடனோ அல்லது இல்லாமலோ.

பாலிக்ளினிக்

Chemin de l'Hôpital 9

2900 போர்ரெந்த்ரூய் (Porrentruy)

032 465 60 41 (நடமாடும் சேவை)

032 465 60 42 (காய சேவை)

பாலிக்ளினிக் மருத்துவமனை நோயாளிகளை மற்ற சேவை மையங்களுக்கும் அனுப்பலாம்.

குழந்தைகளுக்கு, நீங்கள் தெலெமோந்தில் உள்ள மருத்துவமனைக்கு மட்டுமே செல்ல வேண்டும்.

Hôpital de Moutier (urgences non vitales)

அவசர மையம் தினமும் 24 மணி நேரமும் திறந்திருக்கும். அது கீழ்க்கண்ட முகவரியில் அமைந்துள்ளது:

Moutier மருத்துவமனை
Beausite 49
2740 Moutier

032 494 31 51

Moutier மருத்துவமனையின் மனநல அவசர சேவை மனஅழுத்தம் அல்லது மனவேதனை அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகள் தொலைபேசி மூலம் நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம் அல்லது நேரடியாக கீழ்க்கண்ட முகவரிக்கு செல்லலாம்:
Beausite 49

032 484 74 74

பணியில் உள்ள பல் மருத்துவர்: 032 421 34 34

பணியில் உள்ள பல் மருத்துவரை அழைக்க.

பணியில் உள்ள பொது மருத்துவர்: 032 421 00 00

பணியில் உள்ள பொது மருத்துவரை அழைக்க.

MEDIQO மற்றும் MEDIPED சுகாதார மையங்கள்

MEDIQO பொதுமருத்துவ மையம் பல குடும்ப மருத்துவர்களை ஒன்றிணைக்கிறது. நோயாளிகளை சிகிச்சை செய்ய இது நவீன மருத்துவ உபகரணங்களுடன் சீராக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் மூன்று இடங்களில் உள்ளது: Delémont (Pré-Guillaume), Le Noirmont (Franches-Montagnes) மற்றும் Porrentruy (Hôpital du Jura).


Delémont இல், MEDIPED சேவை குழந்தைகளுக்கான ஆலோசனைகளை முன்பதிவு செய்யப்பட்ட நேரத்தின் அடிப்படையில் வழங்குகிறது. இது குழந்தை மருத்துவர்களுடனும் Basel நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையுடனும் இணைந்து செயல்படுகிறது.


இந்த மையம் பெரியவர்களுக்காக முன்பதிவு தேவையில்லாத மருத்துவ அவசர சேவையையும் வழங்குகிறது. இது 16 வயது முதல் உள்ளவர்களை வரவேற்கிறது, குறிப்பாக குடும்ப மருத்துவர் இல்லாதவர்கள் அல்லது அவர்களின் மருத்துவர் கிடைக்காத நேரங்களில், சிறிய அவசர நிலைகளுக்காக.

திறந்திருக்கும் மருந்தகங்கள்

டெலெமோன் (Delémont) மாவட்டத்திற்கு, 079 746 35 45 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும் அல்லது கீழே உள்ள காவல் சேவை அட்டவணையை பார்க்கவும்.

Franches-Montagnes பகுதிக்கு, 032 952 12 01 அல்லது 032 952 12 03 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும்.

போரென்ற்ருய் (Porrentruy) மாவட்டத்திற்கு, காவல் சேவை அட்டவணை இணையத்தில் கிடைக்கிறது (கீழே உள்ள இணைப்பு).

மூத்தியே (Moutier) மாவட்டத்திற்கு, 058 878 20 70 அல்லது 058 878 27 50 அல்லது 032 493 32 02 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும், அல்லது கீழே உள்ள காவல் சேவை அட்டவணையை பார்க்கவும்.

சாலை மீட்பு, சுவிஸ் டூரிங் கிளப் (TCS) : 140 அல்லது 0800 81 78 18

போக்குவரத்து விபத்து அல்லது வாகனம் பழுதாதல் ஆகியவற்றிற்கு, கட்டணம் செலுத்திய பழுது பார்ப்பு சேவைக்காக.

ல மேந்தாந்த்யு(La main tendue ) : 143

உங்களுக்கு பெரிய பிரச்சனைகள் உள்ளதா?

ல மேந்தாந்த்யு ஒரு உதவும் சேவைச் சங்கம். உங்கள் பிரச்சனைகள் மற்றும் கவலைகள் பற்றி அவர்களிடம் பேசலாம். தரமான, பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் உங்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கிறார்கள். அவர்கள் தொழில்முறை இரகசியத்தை காக்கிறார்கள்.

ல மேந்தாந்த்யு உங்களை நியாயந் தீர்க்காமல் மரியாதையுடன் நடத்தும். அது உங்கள் மீதமுள்ள பிரச்சனைக்கு உதவும்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான தொலைபேசி எண்கள் மற்றும் இணையதளங்கள்.

எண் 147

உனக்கு பிரச்சனைகளோ கவலைகளோ உள்ளதா? அதைப் பற்றி பேச யாரையாவது தேடுகிறாயா?

நீங்கள் 147 ஐ அழைக்கலாம்.

இந்த எண்ணில், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி (பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் இத்தாலிய மொழிகளில்) பேசலாம். நிபுணர்கள் தொழில்முறை ரகசியத்தை மதித்து உனது பிரச்சனையை பற்றி கவனமாக கேட்பார்கள்.

இந்த எண் எல்லா நாளும் 24 மணிநேரமும் வேலை செய்யும்.

நீ ஈமெயில், SMS அல்லது CHAT மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

CIAO.ch

CIAO.ch இணைய தளத்தில் பல தலைப்புகளில் கேள்விகளைக் கேட்டு பதில் பெறலாம். உங்களது பெயரை கொடுக்கக் தேவையில்லை. கேள்விகளும் பதில்களும் பெயரற்ற வகையில் இருக்கும். நீங்கள் மற்ற இளைஞர்களுடன் விவாதிக்க கூடச் செய்யலாம்.

முக்கிய நீர் கசிவு

சில நேரங்களில் நீர் குழாய் உடைந்து விடுகிறது. நீர் அதிகமாக இருந்தால், ​​அது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த சூழ்நிலையில், நீங்கள் 032 421 92 00 என்ற எண்ணில் தெலெமோந்தின் தொழில்துறை சேவை மையத்தை (Services industriels de Delémont - SID) தொடர்பு கொள்ளவும் அல்லது 032 465 96 20 என்ற எண்ணில் போர்ரெந்த்ரூய் நகரின் நீர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளவும்.

கிராமங்களில், கொம்யூன் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளவும்.

பதில் இல்லை என்றால், 118 என்ற எண்ணில் தீயணைப்பு படையை அழைக்கவும்.