சுவிட்சர்லாந்தில் புகலிடம்

உங்கள் நாட்டில் நீங்கள் ஆபத்தில் இருந்தீர்களா? நீங்கள் உங்கள் நாட்டை விட்டு வெளியேறி புகலிடம் தேடி வந்தீர்களா? சுவிட்சர்லாந்தில், புகலிடச் சட்டம் (LAsi) புகலிட விதிகளை வரையறுக்கிறது. புலம்பெயர்வுக்கான தேசிய செயலகம் (SEM) ஒவ்வொரு கோரிக்கையையும் கவனமாக ஆய்வு செய்கிறது. இந்த சட்டம் தன் பிறப்பு, மதம், தேசியம், சமூகக் குழு அல்லது அரசியல் கருத்துக்கள் காரணமாக தங்கள் நாட்டில் ஆபத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் மற்றொரு நாட்டில் தஞ்சம் கோர உரிமை உண்டு என்று கூறுகிறது.

புகலிடம் என்றால் என்ன?

உலகெங்கிலும் மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் உதவியை நாட வேண்டியுள்ளது. மேலே விவரிக்கப்பட்ட காரணங்களுக்காக சிலர் தங்கள் நாட்டில் ஆபத்தில் உள்ளனர்.

யுத்தம் காரணமாக பலர் வெளியேற வேண்டியுள்ளது.

அகதிகளாக அங்கீகரிக்கப்பட்ட மக்களுக்கு சுவிட்சர்லாந்து புகலிடம் ( பர்மிட் B அகதி) வழங்குகிறது. அதன் பொருள்: தனிப்பட்ட முறையில் குறிவைக்கப் பட்டு உயிருக்கு ஆபத்தில் உள்ளவர்கள்.

அகதிகளாக அங்கீகரிக்கப் படாத, ஆனால் பாதுகாக்கப்பட வேண்டிய நபர்களுக்கு சுவிட்சர்லாந்து குறிப்பிட்ட காலத்திற்கு (தற்காலிக பர்மிட் F அல்லது S) பாதுகாப்பை வழங்குகிறது.

சுவிட்சர்லாந்தில் புகலிடக் கொள்கை

SEM (புலம்பெயர்வுக்கான தேசிய செயலகம்) சுவிட்சர்லாந்தில் யார் அகதிகளாக இருந்து தஞ்சம் பெறலாம் என்பதை தீர்மானிக்கிறது. இதைச் செய்ய, SEM ஒவ்வொரு கோரிக்கையையும் ஆய்வு செய்கிறது. அது புகலிடம் பற்றிய சட்டம் (LAsi), ஜெனிவா ஒப்பந்தம் மற்றும் டப்ளின் ஒப்பந்தங்களின் படி வரையறுக்கப் பட்ட விதிகளைப் பின்பற்றுகிறது.

அகதி என்றால் தன் பிறப்பு, மதம், தேசியம், சமூகக் குழு அல்லது அரசியல் கருத்துக்கள் போன்ற காரணங்களால் தன் நாட்டில் ஆபத்தில் இருக்கும் ஒரு நபர் ஆகும்.

அகதிகளாக அங்கீகரிக்கப் பட்டவர்கள்:

  • கீழே உள்ள காரணங்களில் ஒன்றிற்காக அச்சுறுத்தல் மற்றும் பெரும் ஆபத்தில் உள்வர்கள்:
  • தன் நாட்டினால் பாதுகாக்கப் படாதது
  • தன் நாட்டின் மற்றொரு பகுதியில் தஞ்சம் அடைய முடியாதது

புலம்பெயர்வுக்கான தேசிய செயலகம் (SEM) ஒவ்வொரு புகலிட விண்ணப்பத்தையும் கவனமாக ஆய்வு செய்கிறது.

புகலிடம் கோருதல் எவ்வாறு என்பதை சுவிஸ் புகலிடச் சட்டம் விளக்குகிறது. இது சுவிட்சர்லாந்தில் குடியிருப்பு, குடியேற்ற விசா, குடும்ப மறு இணைப்பு, வேலை வாய்ப்பு, சமூக உதவி, சுகாதார காப்பீடு மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற பல கூறுகளையும் விளக்குகிறது.

சுவிட்சர்லாந்து டப்ளின் ஒப்பந்த விதிகளையும் பின்பற்றுகிறது. இந்த விதிகள் எந்த நாடு புகலிட விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என்பதை வரையறுக்கிறது. பொதுவாக, அது ஒருவர் தனது கோரிக்கையை முதலில் வைத்த நாடு ஆகும்.

ஜூரா புலம்பெயர்ந்தோர் வரவேற்பு சங்கம் (AJAM)

AJAM புகலிடம் கோரி வருபவர்களை வரவேற்கிறது (பர்மிட் N, F, S மற்றும் B அகதி).

ஜூரா காந்தோனில் அவர்களின் புதிய வாழ்க்கையில் AJAM அவர்களுக்கு ஆதரவளிக்கிறது.

இந்த சங்கம் மக்களுக்கு:

  • மருத்துவ சிகிச்சை பெற
  • வேலை தேட
  • வீடு பிடிக்க
  • மற்றும் ஜூரா சமூக வாழ்க்கையில் ஒருங்கிணைய உதவுகிறது.

ஜூரா காந்தோன் இந்தப் பணியை AJAM க்கு ஒப்படைத்துள்ளது.

AJAM பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கான அனிமேஷன் மற்றும் பயிற்சி மையம் (CAFF) மற்றும் சமூக சுகாதார மையம் (MdSC) ஆகியவற்றையும் கவனித்துக் கொள்கிறது.

புகலிடம் கோரி வருபவர்களின் ஒருங்கிணைப்பு (பர்மிட் N, F, S மற்றும் B அகதி)

இந்த நபர்களின் ஒருங்கிணைப்பு 3 படிகளில் செய்யப்படுகிறது:

1. முதல் வரவேற்பு: வந்து சேர்ந்து தேவைகளை கவணித்தல்

ஜூரா காந்தோனிற்கு வரும் மக்கள் முதலில் ஒரு கூட்டு மையத்திற்குச் செல்கிறார்கள்.

சமூக சேவையாளர்கள் ஒவ்வொரு நபரின் தேவைகளையும் பார்த்து மதிப்பீடு செய்கிறார்கள். ஒன்றாக, அவர்கள் தனிப்பட்ட நோக்கங்களின் அடிப்படையில் ஒரு ஒருங்கிணைப்பு திட்டத்தை உருவாக்குகிறார்கள்.

இந்த நிலை 2 வாரங்கள் நீடிக்கும்.

2. சமூக பழக்கம்: சுவிஸ் வாழ்க்கையை அறிந்து கொள்வது

இந்த நிலை மக்களுக்கு ஜூரா வாழ்க்கையில் இணைய உதவுகிறது (செயல்களைச் செய்ய, நண்பர்களைப் பெற). சமூக கல்வியாளர்கள் மற்றும் சமூக சேவகர்கள் சுவிட்சர்லாந்தில் மக்கள் தங்கள் புதிய வாழ்க்கையை கட்டமைக்க உதவுகிறார்கள்.

இந்த படி 6 மாதங்கள் முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நீடிக்கும்.

3. தொழில்முறை ஒருங்கிணைப்பு: வேலை தேடுதல்

வேலைவாய்ப்பு நிபுணர்கள் ஒரு வேலையைக் கண்டு பிடிப்பதில் உதவுகிறார்கள்.

இந்த நிபுணர்களின் பெயர்: « job coach ». அவர்கள் வெளிநாட்டு டிப்ளோமாக்கள் அங்கீகரிக்கப்படுவதற்கு அல்லது தொழில்முறை பயிற்சியைப் பெறுவதற்கு மக்களுக்கு உதவுகிறார்கள்.

இந்த படி AJAM இன் ஆதரவு முடிவடையும் வரை பல ஆண்டுகள் நீடிக்கும்.

AJAM இன் ஆதரவு எவ்வளவு காலம் நீடிக்கும்?

பொதுவாக, AJAM மக்களுக்கு வேலை கிடைத்து சுதந்திரமாக இருக்கும் வரை உதவுகிறது.

புகலிடம் கோரி வருபவர்களுக்கு AJAM இன் ஒருங்கிணைப்பு சலுகைகள்

பெரியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான ஒருங்கிணைப்பு சலுகைகள் உள்ளன

1. பெரியவர்களுக்கான சலுகைகள்

பெரியவர்களுக்கான சலுகைகள் இவை:

- தகவல் பட்டறைகள்

சுவிட்சர்லாந்திற்கு வந்த பிறகு, மக்கள் பல தகவல் பட்டறைகளில் பங்கேற்கிறார்கள்.

இந்தப் பட்டறைகள் கட்டாயம்.

இந்தப் பட்டறைகள் பிரெஞ்சு மொழியிலும் பிறப்பிட மொழியிலும் நடைபெறுகின்றன. அவை உடல்நலம், ஜூராவில் வாழ்க்கை, வேலை, வீட்டுவசதி போன்ற பல்வேறு கருப்பொருள்களை கொண்டவை.

- பிரஞ்சு பாடங்கள்

இளைஞர்கள் மற்றும் முதியவர்கள், குடும்பத்துடன் அல்லது இல்லாமல், வேலையுடன் அல்லது இல்லாமல் அனைவருக்கும் வெவ்வேறு பிரெஞ்சு படிப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்தப் படிப்புகள் தொடக்கம் (A1) முதல் மேம்பட்ட (B2) நிலை வரை வெவ்வேறு நிலைகளில் உள்ளன.

2. சிறார்களுக்கான வாய்ப்புகள்

15 வயது வரை, குழந்தைகள் தங்கள் உள்ளூர் பள்ளிக்குச் செல்கிறார்கள்.

பொதுவாக, 16 வயதிலிருந்தே, இளைஞர்கள் தொழில்முறை பயிற்சியைப் பின்பற்றுகிறார்கள்.

ஆனால் இளம் வெளிநாட்டவர்கள் முதலில் தங்கள் பிரெஞ்சு மற்றும் பிற திறன்களை மேம்படுத்த சிறப்புப் பயிற்சியைப் பின்பற்றலாம் (உதாரணமாக கணிதம்).

இளைஞர்களுக்கான வாய்ப்புகள் இவை:

- Bravo

எந்த பயிற்சியும் இல்லாத மற்றும் பிரெஞ்சு மொழியைக் கற்கத் தொடங்கும் 16 முதல் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு.

இந்த ப்ரோக்ராம் இந்த இளைஞர்களுக்கு பிரெஞ்சு மொழியில் A1 நிலையை அடைய உதவுகிறது. இது கணிதம் மற்றும் கணினி அறிவியலின் அடிப்படைகளையும் வழங்குகிறது.

- PréFor (பயிற்சிக்கு முந்தைய தயாரிப்பு)

பிரெஞ்சு மொழியில் A1 நிலை கொண்ட 16 முதல் 25 வயதுடைய இளைஞர்களுக்கு.

இந்த திட்டம் இந்த இளைஞர்களுக்கு தொழில்முறை பயிற்சியில் சேர உதவுகிறது.

இது B2 நிலை வரை பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொடுக்கிறது.

இது கணிதம் மற்றும் கணினி அறிவியலில் திறன்களை வழங்குகிறது.

- PAI+ (ஒருங்கிணைப்பு முன் கற்றல்)

பிரெஞ்சு மொழியில் B1 உள்ள 16 முதல் 25 வயதுடைய இளைஞர்களுக்கு.

இந்த ப்ரோக்ராம் இந்த இளைஞர்களுக்கு தொழில்முறை உலகில் நுழைய உதவுகிறது. இது ஒரு தொழிற்பயிற்சியை (AFP அல்லது CFC) பின்பற்ற இளைஞர்களை தயார்படுத்துகிறது.

இந்த திட்டம் 1 வருடம் நீடிக்கும்.

புகலிடத் துறையில் பல்வேறு பர்மிட்கள்

சுவிட்சர்லாந்திற்கு வந்ததிலிருந்து, ஒரு நபர் தனது பர்மிட்டை பல முறை மாற்றுவார்.

இது அவரது புகலிட விண்ணப்பத்தின் நிலைகள் மற்றும் முடிவுகளைப் பொறுத்தது.

ஒருவர் பெறும் பர்மிட் (N, F அல்லது B அகதி) அவர்களின் சட்டப்பூர்வ நிலையின் அடையாளமாகும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள புகலிட அமைப்பில் ஒருவர் எவ்வாறு அங்கீகரிக்கப்படுகிறார் என்பதை சட்ட நிலை காட்டுகிறது.

வெவ்வேறு சட்ட நிலைகள் (அல்லது பர்மிட்கள்) ஒருவரின் வாழ்க்கையில் ஒரே உரிமைகளை வழங்குவதில்லை.

எடுத்துக்காட்டாக, பர்மிட்களைப் பொறுத்து, இவை வேறுபடுகிறது:

  • குடும்பம் ஒன்றிணைவதற்கான உரிமை (உங்கள் குடும்பத்தை சுவிட்சர்லாந்திற்கு கொண்டு வருதல்)
  • வேலை செய்யும் உரிமை
  • சமூக உதவிக்கான உரிமை
  • பயணம் செய்வதற்கான உரிமை

சட்ட நிலைக்கு ஏற்ப வெவ்வேறு பர்மிட்களை விளக்கும் அட்டவணை இங்கே உள்ளது