ஓய்வூதிய திட்டம் (3 தூண்கள்)

சுவிட்சர்லாந்தில், ஓய்வூதிய திட்டம் ஓய்வு பெற்றவர்களுக்கு வாழ்வதற்கு போதுமான பணம் இருப்பதை உறுதி செய்கிறது. ஓய்வூதிய திட்டம் மூன்று தூண்களைக் கொண்டுள்ளது: முதியோர் மற்றும் வாரிசு காப்பீடு (AVS), தொழில்முறை காப்பீடு (LPP), மற்றும் தனிநபர் காப்பீடு (3வது தூண்).

AVS: முதியோர் மற்றும் வாரிசு காப்பீடு (1வது தூண்)

முதியோர் மற்றும் வாரிசு காப்பீடு (AVS) என்பது அடிப்படை தேசிய ஓய்வூதியமாகும். AVS ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்குகிறது.

ஓய்வூதியத்தின் தொகை, ஒருவர் பணியாளராக எத்தனை ஆண்டுகள் பங்களித்தார் என்பதைப் பொறுத்தது. அந்தத் தொகை, அவர் பெற்ற சராசரி சம்பளம் எவ்வளவு என்பதைப் பொறுத்தது.

ஒருவர் இறந்தால், இறந்தவரின் துணைவர் மற்றும் குழந்தைகளுக்கு AVS உதவி வழங்குகிறது (விதவன் அல்லது விதவை மற்றும் அனாதை ஓய்வூதியம்).

அனைத்து பெரியவர்களும் AVSக்கு பங்களிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், பணியாளரின் சம்பளத்தில் ஒரு பகுதி AVS நிதிக்காக பிடிக்கப் படுகிறது. இது பங்களிப்பு நிதியில் பாதி. மறு பாதியை நிறுவனம் செலுத்தும்.

சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வேலையில்லாத நபர்களும் தங்கள் பங்களிப்புகளைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்ய, அவர்கள் கொம்யூனிய AVS நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும்.

தொழில்முறை ஓய்வூதியத் திட்டம் (2வது தூண் - LPP)

AVS ஓய்வூதியம் மட்டும் ஓய்வு பெறுவதற்கு முன்பு இருந்த ஊதிய அளவுக்கு ஓய்வூதித்தை வழங்குவதில்லை. இந்தக் காரணத்திற்காக, ஊழியர்களுக்கு ஒரு தொழில்முறை ஓய்வூதியத் திட்டமும் (LPP) உள்ளது, இது ஒரு குறிப்பிட்ட ஆண்டு வருமானத்திற்கு மேல் உள்ள ஊழியர்களுக்கு கட்டாயமாகும்.

தொழில்முறை ஓய்வூதியத் திட்டம் (LPP) 2வது தூண் அல்லது ஓய்வூதிய சேமிப்புநிதி என்றும் அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும், ஊழியரின் சம்பளத்தில் ஒரு பகுதி LPP நிதிக்காக பிடிக்கப் படுகிறது. இது பங்களிப்பு நிதியில் பாதி. மறு பாதியை நிறுவனம் செலுத்தும்.

நபர் ஓய்வு பெறும்போது, ​​ஓய்வூதிய சேமிப்பு நிதியில் (அல்லது LPP) சேமிக்கப்பட்ட பணத்தை இரண்டு சாத்தியமான வடிவங்களில் பெறுகிறார்:

• ஓன்று மாதாந்திர வடிவில் (மாதாந்திரம் பெறப்படும்)

• அல்லது மொத்த தொகையாக (ஒரே தடவை பெறப்படும்).

நபர் அவர் விரும்பும் வடிவத்தைத் தேர்வு செய்யலாம்.

சில சந்தர்ப்பங்களில், பணத்தை முன்னதாகவே கோரலாம்:

• தான் தன் சொந்த நிறுவனத்தைத் தொடங்கும்போது,

• தான் சுவிட்சர்லாந்திற்கு வெளியே குடிபெயரும் போது, ​​சில நிபந்தனைகளின் கீழ்,

• தான் வசிக்க ஒரு வீட்டைக் கட்டும்போது அல்லது அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும்போது.

சுயதொழில் செய்பவர்கள் பங்களிப்பு செய்யத் தேவையில்லை. அவர்கள் தானாக முன்வந்து அவ்வாறு செய்யலாம். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவர்களின் பொறுப்பு. அதற்கு, அவர்கள் ஓய்வூதிய சேமிப்பு நிதி நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.

தனியார் ஓய்வூதிய திட்டம் (3வது தூண்)

3வது தூண் மூலம் உங்கள் ஓய்வுக் காலத்தை சிறப்பாக பாதுகாக்க முடியும். இது ஒரு தனியார்மற்றும் தனிநபர் ஓய்வூதிய திட்டம்.

இது கட்டாயமில்லை, ஆனால் பரிந்துரைக்கப்படுகிறது. இது ஓய்வூதியத்திற்கான கூடுதல் சேமிப்பை வழங்குகிறது.

ஒருவர் வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனத்தில் 3வது தூணை ஏற்பாடு செய்து கொள்ளலாம். (3a எனப்படும்) 3வது தூணில் செலுத்தப்பட்ட தொகையை உங்கள் வரிகளிலிருந்து கழிக்கலாம்.

AVS துணைப் பலன்கள் (அல்லது PC AVS)

சில நேரங்களில், AVS மற்றும் சேமிப்பு நிதி இருந்த போதும், முதியவர்களுக்கு தங்களின் (உணவு, வீடு போன்ற) அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான பணம் இருக்காது.

அப்படியானால் அவர்கள் துணைப் பலன்களுக்கு (அல்லது PC) உரிமை பெறலாம். அவர்கள் கொம்யூனிய AVS நிறுவனத்திடமிருந்து PCக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

துணைப் பலன்களுக்கு (PC) யார் தகுதியானவர்கள், அல்லது அற்றவர்கள், என்பதற்கு தெளிவான விதிகள் உள்ளன.