சுகாதார காப்பீடு (அடிப்படை காப்பீடு - LAMal)
சுவிட்சர்லாந்தில் வசிக்கும் அனைத்து குடியிருப்பாளர்களும் மருத்துவ காப்பீட்டை (அடிப்படை காப்பீடு - LAMal) தாங்களாகவே எடுக்க வேண்டும். இது கட்டாயமாகும்.
நீங்கள் சுவிட்சர்லாந்துக்கு வருகிறீர்களா?
உங்களுக்கு மருத்துவக் காப்பீடு எடுக்க 3 மாதங்கள் உள்ளன.
இந்த சமயத்தில் நீங்கள் நோய்வாய்ப்பட்டால், செலவுகளுக்கு பின்னர், அந்த தொகை உங்களுக்கு பிறகு வழங்கப்படும்.
பல மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் அடிப்படை காப்பீட்டை வழங்குகின்றன.
மருத்துவ காப்பீட்டு வழங்குநரைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சுதந்திரம் உண்டு.
அடிப்படை காப்பீட்டைப் பொறுத்தவரை, மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் அனைவரையும், நோய்வாய்ப்பட்டவர்களையும் கூட ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அடிப்படை காப்பீடு: அது எதை உள்ளடக்கியது?
அடிப்படை காப்பீடு நோய் ஏற்பட்டால் அதன் செலவுகளை ஏற்கிறது, கர்ப்பம் மற்றும் பிரசவ செலவுகள் உட்பட.
(காப்பீடு செலுத்த வேண்டிய அனைத்து) பலன்கள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கவனிக்க: பல் பராமரிப்பு அல்லது கண்ணாடிகளுக்கான செலவுகள் பொதுவாக ஈடுகட்டப் படாது.
காப்பீட்டு பிரீமியங்கள்
உங்கள் காப்பீட்டுக்கான மாதாந்திர பிரீமியத்தை நீங்கள் செலுத்துகிறீர்கள்.
இந்த பிரீமியங்கள் மருத்துவ காப்பீட்டு நிறுவனம் மற்றும் காப்பீட்டு மாதிரியைப் பொறுத்து மாறுபடும். குறிப்பு: பலன்களை நேரம் ஒதுக்கி ஒப்பிட்டுப் பாருங்கள்.
நீங்கள் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களை மாற்றலாம், ஆனால் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே (நவம்பர் இறுதிக்குள்).
செலவுகளுக்கு நான் பங்களிக்க வேண்டுமா?
சுவிட்சர்லாந்தில், ஒரு மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு முன்பு, நீங்கள் முதலில் franchise(கழிவு) செலுத்த வேண்டும்.
பல சாத்தியமான கழிவுகள் உள்ளன: எடுத்துக்காட்டாக, CHF 300, CHF 500, CHF 1,000 அல்லது CHF 2,500 கழிவு. நீங்கள் விரும்பும் கழிவுத் தொகையை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள். முதலில் இந்தத் தொகையை நீங்களே செலுத்த வேண்டும்.
பின்னர், காப்பீட்டு நிறுவனம் செலவுகளில் ஒரு பகுதியை ஈடுகட்டுகிறது. அது செலவுகளில் 90% த்தை செலுத்துகிறது.
மீதமுள்ள 10% த்தை நீங்களே செலுத்த வேண்டும்.
மீதமுள்ள இந்த 10% த்தை quote-part(பங்கு) என்று அழைக்கப்படுகிறது.
பங்கிற்காக, நீங்கள் ஒரு பெரியவருக்கு வருடத்திற்கு அதிகபட்சமாக CHF 700 மற்றும் ஒரு குழந்தைக்கு CHF 350 செலுத்துகிறீர்கள். அடுத்து, செலவுகள் இதற்கு அதிகமாக இருந்தால், காப்பீடு அனைத்தையும் செலுத்தும்.
எந்த கழிவை தேர்வு செய்ய வேண்டும்?
நீங்கள் எப்போதாவது நோய்வாய்ப் பட்டால், அதிக கழிவைத் தேர்வு செய்யவும். பிரீமியம் சற்று குறைவாகவே இருக்கும்.
நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப் பட்டால், குறைந்த கழிவைத் தேர்வு செய்யவும்.
ஆனால் பிரீமியம் சற்று அதிகமாகவே இருக்கும்.