ஊனமுற்றோர் காப்பீடு
ஊனமுற்றோர் காப்பீடு (AI) என்பது ஒரு அடிப்படை தேசிய காப்பீடு.
அனைத்து பெரியவர்களும் AI-க்கு பங்களிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், பணியாளரின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி AI நிதிக்கு பிடிக்கப் படுகிறது. இது பங்களிப்பு நிதியில் பாதி. மறு பாதியை நிறுவனம் செலுத்தும்.
சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வேலையில்லாதவர்களும் தங்கள் பங்களிப்புகளைச் செலுத்த வேண்டும். அவ்வாறு செய்ய, அவர்கள் வசிக்கும் கொம்யூனில் உள்ள AVS/AI நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.