சுவிட்சர்லாந்தில் பள்ளி மற்றும் கல்வி

நல்ல கல்வியைப் பெறுவது முக்கியம். கட்டாயக் கல்வி குழந்தைகளுக்கு தங்களின் தொழிலைத் தேர்ந்தெடுப்பதில் பயனுள்ளதாக இருக்கும் அறிவை வழங்குகிறது. கட்டாயக் கல்விக்குப் பிறகு, தொழில் அல்லது பொதுக் கல்வி மூலம் தங்களின் கல்வியைத் தொடர்வது முக்கியம். ஒரு நல்ல கல்வி உங்களுக்கு நல்ல வேலையைப் பெற உதவுகிறது.

சுவிட்சர்லாந்தில் பள்ளி மற்றும் கல்வி முறை

சுவிட்சர்லாந்தில், பள்ளிக்கல்வி மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:

1. கட்டாயக் கல்வி: தொடக்கப்பள்ளி மற்றும் இடைநிலைப் பள்ளி I

2. கட்டாயக் கல்விக்குப் பிறகு இடைநிலைப் பள்ளி II:

ஒன்று ஆரம்ப தொழிற்கல்வி (தொழில் பயிற்சி)

அல்லது பொதுக் கல்வி (உயர்நிலைப் பள்ளி, பொதுக் கல்விப் பள்ளி)

3. படிப்பைத் தொடர: சிறப்பு அறிவியல் கல்லூரிகள் (HES), பல்கலைக்கழக கல்லூரிகள் (HEU), ஆசிரியர் கல்விக் கல்லூரிகள் (HEP), மற்றும் தொழிற்கல்விக் கல்லூரிகள் (ஒன்றிய சான்றிதழ், ஒன்றிய டிப்ளமோ அல்லது உயர் கல்வி பட்டம் (ES).

கல்விக்கு அரசு (ஒன்றியம், காந்தோன்கள் மற்றும் கொம்யூன்கள்) பொறுப்பாகும். ஒன்றியம், காந்தோன்கள் மற்றும் கொம்யூன்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பொறுப்புகளைக் கொண்டுள்ளன. இந்த காரணத்திற்காக, பள்ளிக்கல்வி முறைகளில் ஒரு காந்தோனிலிருந்து மற்றொரு காந்தோனிற்கு இடையே வேறுபாடுகள் உள்ளன.

படிப்புக்கான கட்டணம்

கட்டாயக் கல்வி மற்றும் கட்டாயக் கல்விக்குப் பிந்தைய பயிற்சி (இடை நிலைப் பள்ளி II) இலவசம்.

கல்வியைத் தொடர விரும்புகிறீர்களா? போதிய வருமானம் இல்லையா?

காந்தோன் உங்களுக்கு உதவித்தொகை அல்லது கல்விக் கடன் மூலம் நிதி உதவி வழங்க முடியும். இந்த உதவி கல்விச் செலவின் ஒரு பகுதியை ஈடுகட்ட உதவும்.

நீங்கள் வெளிநாட்டவரா? நீங்களும் சில நிபந்தனைகளின் கீழ் கல்வி உதவித்தொகைக்கு பெறலாம்.

Service de la formation postobligatoire – SFP (கட்டாயக் கல்விக்குப் பிந்தைய பயிற்சி துறையின்) உதவித்தொகைப் பிரிவு கல்வி உதவித்தொகைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

கல்வி மற்றும் தொழில் தெரிவுகள் குறித்த ஆலோசனை

Centre d'orientation scolaire et professionnelle et de psychologie scolaire – COSP (பள்ளி மற்றும் தொழிற் கல்வி பற்றிய வழிகாட்டல் மற்றும் கல்வி உளவியல் மையம்) உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் தகவல்களை வழங்குகிறது. அது உங்கள் கல்வியின் வெவ்வேறு நிலைகளிலும், தொழிற் கல்வி, மேல் படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகளிலும் உங்களுக்கு துணை நின்று ஆலோசனை வழங்குகிறது.