ஓட்டுநர் உரிமம்

சுவிட்சர்லாந்தில் கார் அல்லது மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு, ஓட்டுநர் உரிமம் கட்டாயமாகும். சுவிட்சர்லாந்திற்கு குடிபெயரும்போது, ​​உங்கள் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை சுவிஸ் உரிமமாக மாற்ற வேண்டும்.

வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம்

சுவிட்சர்லாந்திற்கு குடிபெயரும்போது, ​​உங்களிடம் ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் இருந்தால், அதை சுவிஸ் உரிமத்திற்கு பரிமாற்றிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு இதை செய்ய 12 மாதங்கள் உள்ளன. உங்கள் கோரிக்கையை Office cantonal des véhicules (OVJ) (காந்தோனிய வாகன அலுவலத்தில்) கூற வேண்டும்.

நீங்கள் வரும் நாட்டைப் பொறுத்து, உங்கள் சுவிஸ் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு நீங்கள் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கலாம். நீங்கள் கோட்பாடு மற்றும்/அல்லது செயல்முறை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியிருக்கலாம். Office cantonal des véhicules (OVJ) (காந்தோனிய வாகன அலுவலகம்) உங்களுக்கு இந்த விஷயத்தில் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகிறது.

ஓட்டுநர் கோட்பாட்டுத் தேர்வு

ஓட்டுநர் உரிமத்தைப் பெற விரும்பினால், முதலில் நீங்கள் ஒரு கோட்பாட்டுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

ஜூரா காந்தோனில், கோட்பாட்டுத் தேர்வை பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலியன் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதலாம். Office cantonal des véhicules (OVJ) (காந்தோனிய வாகன அலுவலகம்) உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகிறது.

செயல்முறை ஓட்டுநர் தேர்வு

கோட்பாட்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன், உங்களுக்கு பயிற்சி ஓட்டுநர் அனுமதிச் சீட்டு கிடைக்கும். ஒரு தொழில்முறை பயிற்றுவிப்பாளரிடம் ஓட்டுநர் பயிற்சியை பெறுவது நல்லது. செயல்முறை ஓட்டுநர் தேர்வை எதிர் கொள்ள நீங்கள் தயாராகும் போது பயிற்றுவிப்பாளர் உங்களுக்குச் சொல்வார்.