சுவிட்சர்லாந்தின் எழுதப்படாத சட்டங்கள் மற்றும் தனித்தன்மைகள்

ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் கலாச்சார தனித்தன்மைகள் உள்ளன. சுவிட்சர்லாந்திலும் சில எழுதப்படாத சட்டங்கள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிப்பது முக்கியம்.

பல்வேறு கலாச்சாரங்கள்

சுவிட்சர்லாந்து வெவ்வேறு பிராந்தியங்கள் மற்றும் நான்கு தேசிய மொழிகள் கொண்ட கலாச்சார ரீதியாக வேறுபட்ட நாடு. மனப்பான்மைகள் பிராந்திய ரீதியாக வேறுபடுகின்றன. பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தின் தனித்தன்மைகள் ஜெர்மன் மொழி பேசும் அல்லது இத்தாலிய மொழி பேசும் சுவிட்சர்லாந்திற்கு பொருந்தாது. நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையிலான வேறுபாடுகளும் பெரியவை. இருப்பினும், சுவிட்சர்லாந்து முழுவதிற்கும் ஒற்றுமைகள் உள்ளன:

வணக்கவுரை

சுவிட்சர்லாந்தில் உள்ளவர் ஒருவரையொருவர் வாழ்த்தும்போது, ஆண்கள் மற்றும் பெண்களிடையே கூட, மக்கள் கைகுலுக்கி, ஒருவரையொருவர் கண்களில் பார்க்கிறார்கள். ஜூரா மாகாணத்தில் வழக்கமான வாழ்த்து முறை "பொன்ஞ்சூர்(Bonjour)", ஆனால் நண்பர்களிடையே நீங்கள் "சல்யூ(Salut)" என்று சொல்லலாம். கிராமப்புறங்களில், ஒருவரையொருவர் அறியாவிட்டாலும், தெருவில் ஒருவரையொருவர் வாழ்த்துவது வழக்கம்.

"மெர்சி" (merci) மற்றும் "த ரியான்" (de rien) ஆகிய வார்த்தைகளை கூறுவதும் முக்கியமானவை. கடைகள் மற்றும் உணவகங்கள் உட்பட.

நேரம் தவறாமை

நேரம் தவறாமை என்றால் தாமதிக்காமல் இருப்பது.

சுவிட்சர்லாந்தில், மக்கள் பொதுவாக நேரம் தவறாமையை கடைபிடிப்பார்கள்.

நீங்கள் 5 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வந்தால், தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் தெரிவிப்பது மரியாதையானது. பணியிடத்தில் நேரம் தவறாமை மிகவும் முக்கியமானது.

கலந்துரையாடல் சந்திப்புகள் ஆகியவற்றிற்கு, முன்கூட்டியே ஒரு திட்டவட்டமான நேரத்தை உறுதி செய்து கொள்வது நல்லது.

நெருக்கமான நண்பர்களுடனும் கூட, முன்னறிவிக்கப்படாத வருகை வழக்கம் அல்ல.