கட்டாயக் கல்விக்குப் பிந்தைய பயிற்சி (இடைநிலைப் பள்ளி II)

கட்டாயக் கல்விக்குப் பிறகு, இடைநிலைப் பள்ளியில் பொதுக் கல்வியிலோ அல்லது தொழிற்கல்வியிலோ இளைஞர்கள் தங்கள் கல்வியைத் தொடர்கின்றனர். பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் இளைஞர்கள் உயர்நிலைப் பள்ளி டிப்ளோமா, தொழிற்கல்வி அல்லது சிறப்புக் கல்வி பெற வேண்டும்.

ஆரம்ப தொழிற்கல்வி (தொழில்பயிற்சி)

கட்டாயக் கல்விக்குப் பிறகு, இளைஞர்கள் ஆரம்ப தொழிற்கல்வி (தொழில்பயிற்சி) தொடரத் தேர்வு செய்யலாம். இது ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ள அனுமதிக்கும் ஒரு அடிப்படை பயிற்சித் திட்டமாகும்.

இரட்டைப் பயிற்சி (நிறுவனம் + பள்ளி)

பயிற்சியின் போது, இளைஞர்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். அந்தத் தொழில் தொடர்பான நடைமுறைத் திறன்களைக் கற்றுக்கொள்கிறார்கள். மேலும் வாரத்தில் 1 அல்லது 2 நாட்கள் தொழிற்கல்விப் பள்ளிக்கு செல்கிறார்கள்.

இந்த வகைப் பயிற்சி இரட்டைப் பயிற்சி என்று அழைக்கப்படுகிறது: ஒரு பகுதி ஒரு நிறுவனத்திலும், மற்றொரு பகுதி தொழிற்கல்விப் பள்ளியிலும் நடைபெறுகிறது.

ஒரு தொழிற்கல்விப் பள்ளியில் தொழிற்கல்வி

நிறுவனங்களில் குறித்தகால பயிற்சிகளுடன், ஒரு பள்ளியில் முழுநேர பயிற்சிப் படிப்பை பெறவும் முடியும்.

பயிற்சிக் காலம்

ஒரு பயிற்சிப் படிப்பு 2 முதல் 4 ஆண்டுகள் வரை நீடிக்கும். இளைஞர்கள் ஒன்றிய தொழிற்கல்வி சான்றிதழ் (attestation fédérale de formation professionnelle - AFP) அல்லது ஒன்றிய திறன் சான்றிதழ் (certificat fédéral de capacité - CFC) பெறுகிறார்கள்.

ஒரு பயிற்சிப் படிப்பு டிப்ளோமாவுடன், இளைஞர்கள் வேலை தேடலாம்.

அவர்கள் உயர் தொழிற்கல்வி பயிற்சியையும் பெறலாம், பின்னர் சிறப்புக் கல்லூரியில் சேரலாம்.

கட்டாயப் பள்ளிப்படிப்பின் இறுதி ஆண்டில், இளைஞர்கள் தாங்களாகவே ஒரு நிறுவனத்தில் பயிற்சி வேலையைத் தேட வேண்டும். பெற்றோர்கள் இளைஞர்களுக்கு உதவ வேண்டும்.

Centre d’orientation scolaire et professionnelle et de psychologie scolaire (COSP) (பள்ளி மற்றும் தொழிற் கல்வி பற்றிய வழிகாட்டல் மற்றும் கல்வி உளவியல் மையம்) இளைஞர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி வழிகாட்டுகிறது.

‘MON APP’ செயலி, இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு தொழிலைக் கண்டறியவும், ஒரு தொழிற்பயிற்சியைக் கண்டறியவும் உதவுகிறது.

பொதுக் கல்வி (படிப்பை தொடர்தல் )

கட்டாயப் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு, இளைஞர்கள் தங்கள் படிப்பைத் தொடரவும் தேர்வு செய்யலாம்.

அவர்கள் உயர்நிலைப் பள்ளி அல்லது பொதுக் கல்விப் பள்ளியில் சேரலாம்.

உயர்நிலைப் பள்ளி

உயர்நிலைப் பள்ளி மூன்று ஆண்டுகள் நீடிக்கும், மாணவர்கள் உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் (certificat de maturité gymnasiale) பெறுகிறார்கள். உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் அவர்கள் பல்கலைக்கழகம் அல்லது உயர் கல்வி நிறுவனத்தில் தங்கள் படிப்பைத் தொடர அனுமதிக்கிறது.

பொரென்த்ரூயில் உள்ள காந்தோனல் உயர்நிலைப் பள்ளி, அவ்வாறு செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு ஜெர்மன்-பிரெஞ்சு இருமொழி பாடத் திட்டத்தையும் வழங்குகிறது.

பொதுக் கல்விப் பள்ளி (ECG)

பொதுக் கல்விப் பள்ளி மூன்று ஆண்டுகள் நீடிக்கும்; மாணவர்கள் பொதுக் கல்விச் சான்றிதழைப் பெறுகிறார்கள். சான்றிதழைப் பெற்ற பிறகு, மாணவர்கள் கூடுதலாக ஒரு ஆண்டு படித்து சிறப்புப் பள்ளி சான்றிதழ் பெறலாம். மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்புக் கல்லூரியில் (Haute Ecole Spécialisée - HES) தங்கள் படிப்பைத் தொடர சிறப்புப் பள்ளி சான்றிதழ் அனுமதிக்கிறது.

இறுதியாக, மாணவர்கள் முழுப் படிப்பையும் முடிக்காமல், நேரடியாக ஒன்றிய தேர்ச்சித் தேர்வுகளை எடுக்கலாம். மாணவர்கள் ஒரு தனியார் பள்ளியின் திட்டங்களைப் பின்பற்றி அல்லது சுயமாகக் கற்றுக்கொண்டு தேர்வுகளுக்குத் தயாராகலாம்.

"விளையாட்டு-கலை-படிப்புகள்"

12 வயது முதல், உயர்நிலை விளையாட்டு அல்லது கலை நடவடிக்கைகளில் பங்கேற்கும் இளைஞர்கள் « Sport-Arts-Etudes » (SAE) 'விளையாட்டு-கலை-படிப்புகள்' இல் சேரலாம். பெற்றோர்கள் கல்வித் துறைக்கு எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும்.