பொழுது போக்கு

ஜூரா மாகாணத்தில் உங்கள் ஓய்வு நேரத்தை செலவிட பல வழிகள் உள்ளன (விளையாட்டு, இசை, நடனம்). சங்கங்கள் மிகவும் முக்கியமானவை. மற்றவர்களை சந்தித்து அவர்களுடன் பழகுவதற்கான வாய்ப்பை அவை நமக்கு வழங்குகின்றன.

சங்கங்கள்

ஜூரா வாசிகள் பலர் ஏதேனும் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். அங்கே எல்லாவித பொழுது போக்கு சங்கங்களும் உள்ளன.

உதாரணமாக, விளையாட்டு அல்லது இசை சங்கங்கள்.

சிறிய கிராமங்களில் கூட விளையாட்டு மற்றும் கலாச்சார சங்கங்கள் உள்ளன.

அவற்றில் அனைவரும் இணைந்து மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள வாய்ப்பு உள்ளது.

சங்கங்கள் பற்றிய தகவல்களை நகராட்சியின் இணையதளங்களில் காணலாம்.

இளைஞர்களுக்கான வாய்ப்புகள்

ஜூரா மாகாணம் இளைஞர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது

ஆக்சிஜன் (Oxyjeune) தளம் ஜூராவின் மற்றும் பெர்ன் பகுதி ஜூராவின் இளைஞர்களுக்கான அனைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் வழங்குகிறது

தெலமோந்த் (Delémont) மற்றும் பொரென்ட்ரூயி (Porrentruy)யில் பல இளைஞர் மையங்கள் உள்ளன.

இந்த மையங்களில், இளைஞர்கள் தங்கள் யோசனைகளை வழங்கலாம் மற்றும் தங்கள் திட்டங்களை செயல்படுத்தலாம்.

செயல்கள் பொதுவாக இலவசமாக வழங்கப்படும்.

பல கிராமங்களில் இளைஞர் சங்கங்கள் உள்ளன, அவை திறந்த வெளி விளையாட்டு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கின்றன மற்றும் இளைஞர்கள் தங்கள் சகாக்களை சந்திக்க உதவுகின்றன.

உல்லாசப் பயணங்கள் மற்றும் கலாச்சாரம்

ஜூரா மாகாணம் ஏராளமான உல்லாசப் பயண மற்றும் வளமான கலாச்சார வாய்ப்புகளை வழங்குகிறது. வரலாற்றுச் சார்பான பழமையான நகரங்கள், அரண்மனைகள், ஆறுகள் மற்றும் குளங்கள் உள்ளன.

பல அழகான ஹைகிங் மற்றும் சைக்கிள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளலாம்.

பல அருங்காட்சியகங்கள் பல்வேறு தலைப்புகளில் கண்காட்சிகளை வழங்குகின்றன.

ஜூரா சுற்றுலா (Jura tourisme) உல்லாசப் பயண வாய்ப்புகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

கலாச்சார நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உள்ளூர் செய்தித்தாள்களிலும் காணலாம்.

குறைந்த விலையிலான விளையாட்டு/கலாச்சார/கல்வி வாய்ப்புகளுக்கு கலாச்சார அட்டை (CarteCulture)

கலாச்சார அட்டை (CarteCulture) மூலம், குறைந்த வருமாணம் உள்ளவர்கள் விளையாட்டு, கலாச்சார மற்றும் கல்வி நிகழ்வுகளில் தள்ளுபடி பெறுகிறார்கள்.

இந்த அட்டையை பெற கரிடாஸ் (Caritas)இல் விண்ணப்பிக்கலாம். அது தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்கும்.

தன்னார்வத் தொண்டு (இலவசமாக உதவி புரிதல்)

தன்னார்வத் தொண்டு என்பது மற்றவர்களுக்கு அல்லது சுற்றுச்சூழலுக்கு செய்யப்படும் ஒரு ஊதியமும் இல்லாத பங்களிப்பாகும்.

சுவிட்சர்லாந்தில் பலர் பணம் கேட்காமல் தானாக முன்வந்து பணிகளை மேற்கொள்கின்றனர். உதாரணமாக, ஒரு விழாவை ஏற்பாடு செய்தல் அல்லது பிரெஞ்சுமொழி பாடங்கள்நடத்துதல்.

இந்த வேலையின் பெரும்பகுதி சங்கங்களில் செய்யப்படுகிறது.

கலாச்சாரம், விளையாட்டு, மக்களுக்கு உதவுதல், பயிற்சி, விலங்குகள் மற்றும் இயற்கையைப் பாதுகாத்தல், ஆரோக்கியம் மற்றும் பலவற்றிற்கான சங்கங்களில் நீங்கள் ஈடுபடலாம்.

பேனேவொலா ஜூரா (Bénévolat Jura) தன்னார்வ பணி மற்றும் வாய்ப்புகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.