இனவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு எடுக்க வேண்டுமா?

இனவெறியை எதிர்த்துப் போராடுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன: இனவெறி பற்றி அறிந்து கொள்தல், அறிந்ததை மற்றவர்களுடன் பேசுதல், அச்செயல்களைக் கண்டனம் செய்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளித்தல் மற்றும் திட்டங்களில் ஈடுபடுதல். Bureau de l’intégration des étrangers et de la lutte contre le racisme (வெளிநாட்டினரின் ஒருங்கிணைப்பு மற்றும் இனவெறி எதிர்ப்பு போராட்ட அலுவலகம்) ஈடுபட விரும்பும் மக்களுக்கு ஆலோசனை வழங்கி ஆதரிக்கிறது.

உங்களிடம் ஒரு திட்டம் இருக்கிறதா?

இனவெறிக்கு எதிரான போராட்டத்தில், தடுப்பு அல்லது விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம் ஈடுபட விரும்புகிறீர்களா? பாகுபாட்டை எதிர்த்துப் போராடவும், "ஒன்றாக வாழ்வது" என்ற திட்டத்திற்காக இயங்கவும் உங்களிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா?

Bureau de l’intégration des étrangers et de la lutte contre le racisme (வெளிநாட்டினரின் ஒருங்கிணைப்பு மற்றும் இனவெறி எதிர்ப்பு போராட்ட அலுவலகம்) இனவெறியை எதிர்த்துப் போராட திட்டங்களை உருவாக்க விரும்பும் மக்களுக்கு ஆலோசனை வழங்கி ஆதரிக்கிறது.

இந்த அலுவலகம் ஒவ்வொரு ஆண்டும் இனவெறிக்கு எதிரான செயல்பாட்டு வாரத்தை (SACR) ஏற்பாடு செய்கிறது.

இந்த வாரத்திற்கான ஒரு செயலை நீங்களும் பரிந்துரைக்கலாம்.

வேலைச்சூழலில்

உங்கள் தொழில்முறை குழுக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறீர்களா அல்லது பணியிடத்தில் பாகுபாடு காட்டப்படும் பிரச்சினைகள் குறித்து உங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புகிறீர்களா? பாகுபாடு இல்லாத பணியிடத்தை வழங்க விரும்புகிறீர்களா? பாகுபாடு இல்லாமல் சேவைகளை வழங்க விரும்புகிறீர்களா?

Bureau de l’intégration des étrangers et de la lutte contre le racisme (வெளிநாட்டினரின் ஒருங்கிணைப்பு மற்றும் இனவெறி எதிர்ப்பு போராட்ட அலுவலகம்) நிர்வாகம், நிறுவனங்கள், வணிகங்கள் மற்றும் சங்கங்களுக்கு ஆலோசனை வழங்கி ஆதரிக்கிறது. அது அவைகளுக்கு இனவெறி மற்றும் பாகுபாடு தொடர்பான பிரச்சினைகள் குறித்த பயிற்சிகளை வழங்க வழிகாட்டுகிறது.