1. தகவல் மற்றும் ஆலோசனை
ஜூரா காந்தோனிற்கு வரும் மக்கள் தகவல் மற்றும் ஆலோசனையைப் பெறுகிறார்கள், எடுத்துக்காட்டாக:
- தினசரி வாழ்க்கை
- உரிமைகள் மற்றும் கடமைகள்
- பிரஞ்சு கற்றல்
- இளம் சிறார்களுக்கு ஆதரவு
- பயிற்சி
- வேலை
- இனவெறிக்கு எதிரான பாதுகாப்பு.
மக்கள் இங்கே வந்த உடன், ஒரு வரவேற்பு அமர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள். கொம்யூன் மற்றும் காந்தோன் அவர்களை வரவேற்று, அவர்களுக்கு காந்தோனில் வாழ்க்கை பற்றியும் பயனுள்ள சேவைகள் பற்றியும் தகவல்களை வழங்குகின்றன.
ஒருங்கிணைப்பு மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டம் பற்றிய கூடுதல் தகவல் மற்றும் ஆலோசனைகளுக்கு இந்த அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்:
வெளிநாட்டினர் ஒருங்கிணைப்பு மற்றும் இனவெறிக்கு எதிரான போராட்டத்திற்கான அலுவலகம்
Faubourg des Capucins 20 – 2800 தெலமோந்த்
மின்னஞ்சல்: secr.bi@jura.ch
தொலைபேசி. 032 420 51 12
திங்கள் மற்றும் வியாழன் 8:30 மணி முதல் 12 மணி வரை மற்றும் 1:30 முதல் 4:30 மணி வரை
வெள்ளி 8:30 மணி முதல் 12 மணி வரை மற்றும் 1:30 முதல் 4 மணி வரை.
AJAM குறிப்பாக புகலிடம் கேட்டு வருபவர்களுக்கு தகவல் மற்றும் ஆலோசனைகளை வழங்குகிறது.