சுவிட்சர்லாந்தில், சிலர் வருமானவரி கேட்பு ஆணையை பெறுவதில்லை. அவர்களின் வரிகள் நேரடியாக சம்பளத்திலிருந்து கழிக்கப் படுகின்றன. இது வரி பிடித்தம் செய்தல் என்று அழைக்கப்படுகிறது.
வரி பிடித்தம் செய்தல் முறை முக்கியமாக பின்வரும் நேர்வுகளில் பயன்படுத்தப் படுகிறது:
• C பர்மிட் இல்லாத சுவிட்சர்லாந்தில் வசிக்கும் வெளிநாட்டினர்.
குறிப்பு: C பர்மிட் இல்லாதவர்கள், ஆனால் சுவிஸ் நபரை அல்லது C பர்மிட் உள்ள நபரை திருமணம் செய்து கொண்டவர், வரி பிடித்தம் செய்தலுக்கு உள்ளாவதில்லை.
• வெளிநாட்டில் வசித்து, சுவிட்சர்லாந்தில் பணிபுரிபவர் (எ.கா., எல்லை தாண்டி போய் வருவோர்).
இது எப்படி வேலை செய்கிறது?
நிறுத்தி வைக்கும் வரி ஒவ்வொரு மாதமும் ஊழியரின் சம்பளத்திலிருந்து நேரடியாகக் கழிக்கப்படுகிறது.
இது நிறுவனத்தால் கையாளப்படுகிறது: அது ஊழியரை வரி அலுவலகத்தில் அறிவித்து அவர் சார்பாக வரி செலுத்துகிறது.
வரித் தொகை பல காரணிகளைப் பொறுத்தது:
- வருமானம்,
- திருமண நிலை (மணமாகாதவர், மணமானவர், முதலியன),
- குழந்தைகளின் எண்ணிக்கை.
நிலைமை மாறினால் (எ.கா., திருமணம் அல்லது பிறப்பு), ஊழியர் உடனடியாக தங்கள் நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டும். இது வரித் தொகையை மாற்றலாம்.
வரிகளை நிறுவனத்தின் மூலம் செலுத்துகிறீர்களா?
நீங்கள் செலவுகளை தாக்கல் செய்யலாம்!
நீங்கள் சில செலவுகளை செய்தால் (எ.கா., 3e தூண் A ஓய்வூதிய கட்டணம்), நீங்கள் இந்த செலவுகளை தாக்கல் செய்யலாம். இதைச் செய்ய, பின்னர் நீங்கள் Service des contributions (வரி அலுவலகத்திலிருந்து) ஒரு பிந்தைய சாதாரண வரிவிதிப்பு விண்ணப்பத்தைக் கோரலாம். இதை taxation ordinaire ultérieure (TOU) (பிந்தைய சாதாரண வரிவிதிப்பு) என்கிறோம்.
நீங்கள் இதை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை சமர்ப்பிக்கலாம். பின்னர் நீங்கள் பூர்த்தி செய்ய ஒரு படிவத்தைப் பெறுவீர்கள்.
ஜூராவில் TOU கட்டாயமாகும்
ஜூரா காந்தோனில், நேரடியாக சம்பளத்திலிருந்து வரி கழிக்கப் படும் சில நபர்கள் பிந்தைய சாதாரண வரிவிதிப்பு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
அவர்கள் பின்வருபவர்களாகும்.:
• வரி விதிக்கக்கூடிய சொத்து (எ.கா., வங்கியில் பணம்) உள்ளவர்
• அல்லது சம்பளத்திற்கு கூடுதலாக பிற வருமானம் (எ.கா., வாடகைக்கு விடப் பட்ட வீட்டிலிருந்து
வாடகை வருமானம்).
உங்கள் நிலை இதுவாக இருந்தால், நீங்கள் Service des contributions (வரி அலுவலகத்திற்கு) எழுத வேண்டும். பின்னர் உங்களுக்கு ஒரு படிவம் கிடைக்கும்.
அடுத்து?
நீங்கள் வருமானத்தை தாக்கல் செய்தவுடன், பின்வருவற்றை பெறுவீர்கள்:
• நீங்கள் இன்னும் எவ்வளவு வரி கட்டவேண்டும் (அல்லது ஏற்கனவே கட்டியுள்ளீர்கள்) என்பதைக் காட்டும் அறிக்கை,
• பின்னர் உங்கள் சூழ்நிலையைப் பொறுத்து ஒரு கேட்பு ஆணை அல்லது பணத்தைத் திரும்பப் பெறுதல்.
அடுத்து, நீங்கள் மூலத்தில் வரி விதிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.
எங்கு உதவி பெறலாம்?
நீங்கள் Service des contributions (வரி அலுவலக) வலைத்தளத்தில் அனைத்து தகவல்களையும் காணலாம்.