குறைந்த பணத்தில் வாழ்கிறார்

சுவிட்சர்லாந்தில் வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகமாக உள்ளது. அதனால்தான் சில (முன்னர் பயன்படுத்திய) பழைய பொருட்களை வாங்குவது உதவியாக இருக்கும். குறைந்த நிதி உள்ளவர்கள் நிதி உதவிக்கு தகுதியுடையவர்களாக இருக்கலாம். அவர்கள் குறைந்த விலை கடைகளில் வாங்கலாம்.

அரசு ஆதரவு

பொதுவாக, குறைந்த பணத்தில் வாழும் மக்கள் அரசு உதவிக்கு உரிமையுடையவர்கள். மருத்துவ காப்பீடு பிரீமியங்கள் அல்லது கல்வி உதவித்தொகை ஆகியவற்றிற்கு மானியங்கள் மூலம் உதவி பெற முடியும். சில சூழ்நிலைகளில், நாம் சமூக காப்பீடு அல்லது சமூக உதவி யிலிருந்து பணத்தைப் பெறலாம்.

சங்கங்களின் ஆதரவு

பல சங்கங்கள் நிதி நெருக்கடியில் உள்ளவர்களுக்கு உதவுகின்றன.

உதாரணமாக: Caritas Jura (கரித்தாஸ் ஜூரா), Croix-Rouge (செஞ்சிலுவை சங்கம்), le Secours d’hiver (குளிர்கால உதவி), Mimosa Jura (மிமோசா ஜூரா) அல்லது Armée du Salut (நலன் படை).

அவர்களின் ஆதரவு பல்வேறு வடிவங்களை எடுக்கும்: எ.கா. தகவல், ஆலோசனை, நேரடி நிதி உதவி அல்லது உணவு வழங்கல்.

JU-lien.org மூலம் எளிதாக உதவி பெறலாம்

JU-lien.org இணையதளத்தில், ஜூரா காந்தோனில் கிடைக்கும் நிதி உதவி பற்றிய தகவல்களை நீங்கள் காணலாம். இந்த தளம் இலவச மற்றும் இரகசியமான தகவல் சேவையையும் வழங்குகிறது. ஆன்லைனில் அல்லது தொலைபேசி மூலம் (079 677 37 65), நீங்கள் ஒரு நிபுணருடன் இலவச மற்றும் இரகசியமான ஆலோசனையைப் பெறலாம்.

பயன் படுத்தப்பட்ட (அல்லது 2வது கை) பொருட்கள்

கரித்தாசின் COMM9 பயன் படுத்தப்பட்ட பொருட்களை மலிவான விலையில் வழங்குகிறது.

இவை ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆனால் நல்ல நிலையில் உள்ளவை.

Delémont, Porrentruy மற்றும் Saignelégier இல் COMM9 கடைகள் உள்ளன.

பயன் படுத்தப்பட்ட பொருட்களை இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் காணலாம்.

ஒற்றுமைத்துவ மளிகைக் கடைகள்

குறைந்த நிதி உள்ளவர்கள் ஒற்றுமைத்துவ மளிகைக் கடைகளில் வாங்கலாம். அவர்கள் மலிவு விலையில் உணவு மற்றும் அத்தியாவசிய அன்றாடப் பொருட்களை வாங்கலாம்.

அவ்வாறு செய்ய, அவர்கள் பின்வரும் சங்கங்களில் நேரடியாகப் பதிவு செய்ய வேண்டும்: « Les cartons du cœur », « Table couvre-toi » மற்றும் « Au P’tit plus ». ஒற்றுமைத்துவ மளிகைக் கடைகளில் பொருட்களை வாங்க செய்ய அனைவருக்கும் உரிமை இல்லை.

சில நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

Carte culture (கலாச்சார அட்டை) : விளையாட்டு / கலாச்சாரம் / பயிற்சி

CarteCulture (கலாச்சார அட்டை) மூலம், குறைந்த வருமானத்தில் வாழும் மக்கள் விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பயிற்சிக்கு மலிவான விலையைப் பெறலாம்.

அட்டையைப் பெற, நீங்கள் Caritasகரித்தாசிடம் கோர வேண்டும்.

கரித்தாஸ் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகிறது.