சுருக்கமான அறிமுகம்

ஜூரா சுவிட்சர்லாந்தில் உள்ள 26 மாகாணங்களில் (காந்தோன்கள்) ஒன்று. இது மிகவும் இளையதும் சிறிய மாகாணங்களில் ஒன்றும் ஆகும்.

புள்ளிவிவரங்கள் மற்றும் தகவல்கள்

ஜூரா மாகாணத்தில் 82,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 15% பேர் வெளிநாட்டினர்.

858 கிமீ2 பரப்பளவை கொண்டுள்ள மாகாணமான ஜூரா 4 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: தெலமோந்த் (Delémont), பொரென்ட்ரூயி (Porrentruy), மூத்தியே (Moutier), மற்றும் ஃப்ரான்ஷ் மோந்தாங் (Franches-Montagnes). இதில் 51 நகராட்சிகள் உள்ளடங்கும்.

ஒவ்வொரு பகுதியும் கலாச்சார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வேறுபட்டது.

தலைநகரம் தெலமோந்த் (Delémont) ஆகும் மற்றும் இங்கே பிரெஞ்ச் மொழி பேசப்படுகிறது.

வரலாறு

1815 திற்கு முன், ஜூரா பகுதி பாசல் மறைமாவட்டத்திற்கு சொந்தமாக இருந்தது. 1815 ஆம் ஆண்டில் வியன்னா காங்கிரஸின் நிகழ்வில் இது பெர்ன் மாகாணத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் ஜூராவின் மக்கள் பிரெஞ்சு மொழி மற்றும் பிரெஞ்சு கலாச்சாரத்தையே பின்பற்றினர். காலப்போக்கில், பிரெஞ்சு மொழி பேசும் பகுதிக்கும் பெர்ன் மாகாணத்தின் மற்ற பகுதிகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஒரு புதிய மாகாணத்தை உருவாக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியது. இறுதியாக, ஜூன் 23, 1974 இல், குடியிருப்பாளர்கள் இறுதியாக ஜூரா மாகாணத்தை ஸ்தாபிக்க வாக்களித்தனர். இது அதிகாரப்பூர்வமாக ஜனவரி 1, 1979 முதல் உருவானது. ஜூராவின் ஒரு பகுதி (பெர்னை சேர்ந்த ஜூரா) பெர்ன் மாகாணத்தில் இருந்தது. மூத்தியே (Moutier) நகரம் 2026 ஜனவரி 1 அன்று ஜூரா கண்டோனில் இணைந்தது.

பாரம்பரியம் மற்றும் விழாக்கள்

ஜூராவில் உள்ள பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் மதம் சார்ந்த விழாக்கள் மற்றும் பருவங்களுடன் இணைந்திருக்கின்றன.

  • பிப்ரவரியில், தெலமோந்த் (Delémont) பள்ளத்தாக்கிலும், ஃப்ரொன்ஷ் மோந்தாஙிலும் (Franches-Montagnes) கார்னிவல் விழா கொண்டாடப்படுகிறது.
  • வசந்த காலத்தில், தெலமோந்த் (Delémont) தில் "தான்ஸ் சூர் லா டூ" (Danse sur la Doux) எனப்படும் மென்மையான நடனம் கொண்டாடப்படுகிறது.
  • கோடையில் கிட்டத்தட்ட ஒவ்வொரு கிராமத்திலும் “கிராமத் திருவிழா” இருக்கும்.
  • ஆகஸ்டில், செய்க்னெலிஜியர் (Saignelégier), குதிரைப் போட்டி மற்றும் சந்தை (Marché Concours National de Cheval) மூலம் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.
  • ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளிலும், ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வார இறுதியில், ஜோடி ஆண்டுகளில் (உதா. 2026, பின்னர் 2028) போர்ரான்றுயில் Braderie நடைபெறும்; ஒற்றை ஆண்டுகளில் (உதா. 2027, பின்னர் 2029) மூத்தியேயில் நடைபெறும் (Braderie de Porrentruy et de Moutier).
  • செப்டம்பரில், ஷான்த் த்யு க்ரோ (Chant du Gros) இசை விழாவானது நுவார்மொந்த் (Le Noirmont) இல் நடைபெறுகிறது.
  • நவம்பர் மாதத்தில், அஜுவாவில் புனித மார்தேன் (St-Martin ) விழா கொண்டாடுகிறோம்

பிராந்திய உற்பத்திப் பொருட்கள்

ஜூரா மாகாணம் அதன் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு பெயர் பெற்றது:

  • தெத் த முவான் பாலாடைக்கட்டி(Tête de Moine AOP) ( ஜுராவின் தயாரிப்பு)
  • தமசின் பிராந்தி (Damassine AOP) (பலமான ஆல்கஹால்)
  • அஜுவாவின் சாசேஜ் (Saucisse d'Ajoie IGP)
  • பன்றி ரத்தத்தில் செய்யப் பட்ட புதேன் (boudin) சாசேஜ் புனித மார்தேன்(St-Martin ) விழாவில் உண்ணப் படுகிறது

பல விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் பிற சிறந்த தரமான பிராந்திய தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறார்கள். ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை கூர்த்மெலோன் (Courtemelon) னில் பிராந்திய தயாரிப்புகளின் முக்கிய போட்டி நடைபெறுகிறது.