போதைப்பொருள், மது மற்றும் புகையிலை

போதைப்பொருள், மது மற்றும் புகையிலைப் பொருள் குறித்த சட்டங்களை கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். கீழ்க் கண்டவற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்:

போதைப் பொருள்

போதைப்பொருள் சட்டத்தின்படி, போதைப் பொருட்களை வைத்திருப்பது, விற்பனை செய்வது மற்றும் உட்கொள்வது தடைசெய்யப்பட்டுள்ளது. இது சிறிய அளவுகளுக்கும் பொருந்தும்.

போதைப்பொருளை வணிக ரீதியாக விற்பனை செய்தால் அதிக அபராதம் விதிக்கப்படும்.

மது மற்றும் புகையிலை

மது மற்றும் புகையிலை விற்பனைக்கு வயது வரம்புகள் உள்ளன. ஜூரா மாகாணத்தில்

  • 16 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மதுபானங்களை விற்கக்கூடாது;
  • புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானங்களை 18 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு விற்கக்கூடாது.

புகைபிடித்தல் மீதான தடை

புகைபிடித்தல் தடைகள் வலுவாக ஒழுங்குமுறைபடுத்தப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகள் அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவுகின்றன.

புகைபிடித்தலுக்கு பின்வரும் சூழ்நிலைகளில் தடை செய்யப்படுகிறது

  • மூடப்பட்ட, பொதுவில் அணுகக்கூடிய இடங்கள் (மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், அரங்குகள், ரயில்கள் மற்றும் பேருந்துகள், கடைகள் மற்றும் ஷாப்பிங் மையங்கள்);
  • அதிகளவு நபர்கள் வேலை செய்யும் அறைகள்.

உணவகங்களில் புகைபிடிப்பது அனுமதிக்கப்படுமா என்பது உணவகம் எவ்வளவு பெரியது என்பதைப் பொறுத்தது. பல உணவகங்களில் சிறப்பு புகைபிடிக்கும் அறைகள் உள்ளன. அவை ஃபுமுவார் என்று அழைக்கப்படுகின்றன.

சிலர் புகைபிடிப்பதை நிறுத்துவது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்துவது கடினம்.

சிலர் புகைபிடிப்பதை நிறுத்துவது அல்லது போதைப்பொருள் பயன்படுத்துவதை நிறுத்துவது கடினம். இவர்கள் அடிமையானவர்கள் (புகையிலை, போதைப்பொருள் போன்றவை). உதவி சலுகைகள் மற்றும் அடிமையாதல் தடுப்பு கோரல் குறித்த தகவல் களை உதாரணத்திற்குஉதவி சேவைகள் மற்றும் துணை நிறுவனங்களில் உங்களுக்கு கிடைக்கும்.