மதம்

சுவிட்சர்லாந்து ஒரு கிறிஸ்தவ நாடு, ஆனால் பலர் மற்ற மத நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் உண்டு மற்றும் பொது பள்ளிகள் மத ரீதியாக நடுநிலை வகிக்கின்றன.

மதம் மற்றும் மாநிலம்

சுவிட்சர்லாந்து ஒரு கிறிஸ்தவ நாடு. ஒவ்வொரு மாகாணமும் மதம் மற்றும் அரசு ஆகியவற்றிக்கு இடையிலான உறவை தீர்மானிக்கிறது. பெரும்பாலான மாகாணங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ஜூரா மாகாணம் ரோமன் கத்தோலிக்க மற்றும் சுவிசேஷ சீர்திருத்த (புராட்டஸ்டன்ட்) தேவாலயங்களை அங்கீகரிக்கிறது. இதன் பொருள் அரசு அவர்களுக்கு சில உரிமைகள் மற்றும் பொறுப்புகளை வழங்குகிறது.

உதாரணமாக, அவர்கள் தங்கள் உறுப்பினர்களிடமிருந்து வரிகளை வசூலிக்கலாம்.

ஜூரா மாகாணத்தில் உள்ள மத சமூகங்கள்

ஜூரா மாகாணத்தில், பெரும்பான்மையான மக்கள் ரோமன் கத்தோலிக்கர்கள் (53%).

அதுவல்லாமல் மற்ற கிறிஸ்தவர்கள் (7%) மற்றும் முஸ்லிம்கள் (2.5%) அங்கு உள்ளனர்.

மக்கள்தொகையில் 16% பேர் மதச்சார்பற்றவர்களாக (டிசம்பர் 31, 2022 இன் புள்ளிவிவர தரவுகளின்படி) தங்களை அடையாளப்படுத்துகின்றனர்.

மத சுதந்திரம்

ஸ்விட்ஸர்லாந்து அரசியலமைப்பு மத சுதந்திரத்தை உறுதி செய்கிறது. ஒவ்வொருவருக்கும் தங்கள் சொந்த மத நம்பிக்கைகளை வைத்திருக்கவும் வெளிப்படுத்தவும் உரிமை உண்டு. ஒரு மத சமூகத்தில் சேரவோ அல்லது மத நடவடிக்கைகளில் பங்கேற்கவோ யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.

அனைத்து மக்களுக்கும் மத சடங்குகள் மற்றும் விழாக்களைக் கடைப்பிடிக்க ஒன்று கூடுவதற்கு உரிமை உண்டு. மதம் அல்லது நம்பிக்கை காரணமாக யாரையும் பாரபட்சமாக நடத்தக் கூடாது.

மதம் மற்றும் பள்ளி

கட்டாய பொதுப் பள்ளி மத ரீதியாக நடுநிலையானது, ஆனால் மதம் குறித்த விஷயங்கள் கற்பிக்கபடலாம்.

பள்ளியில் 'நெறிமுறைகளும் மத கலாச்சாரங்களும்' (Éthique et cultures religieuses) என்ற பாடம் பல்வேறு மதங்கள் மற்றும் மனிதநேய மற்றும் மத மதிப்புகளை அறிந்து கொள்வதை சாத்தியமாக்குகிறது.

சில மத சமூகங்கள் தங்கள் சொந்த மத போதனைகளை வழங்குகின்றன.