சமூகப் பாதுகாப்பு எவ்வாறு செயல்படுகிறது?
சமூகப் பாதுகாப்பின் நிதி எங்கிருந்து வருகிறது?
சமூகப் பாதுகாப்புப் நிதி பொதுவாக வேலையில் இருப்பவர்களிடமிருந்தும் அவர்களின் நிறுவனங்களிடமிருந்தும் வருகிறது.
சமூகப் பாதுகாப்பு நிதியை திரட்ட ஒவ்வொரு ஊழியரின் சம்பளத்திலும் ஒரு பகுதி ஒவ்வொரு மாதமும் பிடிக்கப் படுகிறது.
ஆரோக்கியமானவர்களிடமிருந்து வரும் பணம் நோய்வாய்ப் பட்டவர்களுக்கு உதவுகிறது. இளைய ஊழியர்களிடமிருந்து வரும் பணம் முதியோர் காப்பீட்டிற்குச் உதவுகிறது.
உதவி பெறும் சிறிய குழுவினருக்கு ஏராளமான குடியிருப்பாளர்கள் பணம் செலுத்துகிறார்கள்.
இது solidarité (ஒற்றுமைத்துவம்) என்று அழைக்கப்படுகிறது.
சமூக காப்பீடு பெரும்பாலும் கட்டாயமாகும். ஒவ்வொரு மாதமும், பணியாளரின் சம்பளத்தில் ஒரு பகுதி சமூக காப்பீட்டு நிதிக்காக பிடிக்கப் படுகிறது.
சுயதொழில் செய்பவர்கள் மற்றும் வேலையில்லாதவர்களும் கட்டாயப் பகுதியை செலுத்துகிறார்கள்.
சமூக காப்பீடுகள் அனைத்தும் சட்டத்தால் கட்டுப்படுத்தப் படுகின்றன.