சமூக உதவி
நீங்கள் கடினமான சூழ்நிலையில் அல்லது கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறீர்களா? உங்களிடம் மிகக் குறைந்த அளவே [வாழ்வதற்கான பணம்] உள்ளதா (90330)?
சமூக உதவி உங்களுக்கு உதவி வழங்க முடியும்.
இந்த உதவி சுவிட்சர்லாந்தில் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
நிதி உதவிக்கு கூடுதலாக, அது சமூக சேவையாளரின் மூலமும் ஆதரவை வழங்குகிறது.
சமூக உதவியின் குறிக்கோள், மக்கள் தங்கள் நிதி மற்றும் சமூக சுதந்திரத்தை மீண்டும் பெற்று, கண்ணியமான வாழ்க்கையை நடத்த உதவுவதாகும்.
ஒரு நபர் போதுமான பிற உதவிகளைப் பெற்றால் (உதாரணமாக, வேலையின்மை கொடுப்பனவு, ஓய்வூதியம், சம்பளம் அல்லது பெற்றோர் ஆதரவு), சமூக உதவி பணம் கொடுக்காது. சமூக உதவி கடன்களையும் கட்டாது.